ஹைதராபாத் ரோட் சிக்னலில் சாகசம் செய்யும் அஜித்! வைரலாகும் வீடியோ.. தல வேற லெவல்
Actor Ajith:தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இந்த சினிமாத்துறைக்கு வந்து இன்று அனைவரும் கொண்டாட கூடிய ஒரு நடிகராக வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் காரணமாகும். ஆரம்ப காலங்களில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று வெறியுடன் தொடர்ந்து பல கஷ்டங்களை கடந்து இன்று இந்த அளவுக்கு ஒரு உயரத்தை அடைந்திருக்கிறார் அஜித்.
எந்த ஒரு விமர்சனத்தையும் கண்டு பயப்படாதவர். யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும். நான் என் வழியில் போகிறேன் என்ற ஒரே குறிக்கோளில் தன் வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருக்கிறார் அஜித். தற்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஆதிக் இயக்கத்தில் அஜித், நயன் ஆகியோரின் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.
இதையும் படிங்க: நண்பர் பெயரில் பல கோடி சொத்து!.. விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்!.. அவ்வளவு நம்பிக்கையா?!..
இந்த திரைப்படத்தை மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அஜித் ஒரு ரசிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் மிகவும் சிம்பிள் ஆக அஜித் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த ஒரு புகைப்படத்தை வைத்து ஒருநாள் முழுவதும் கொண்டாடி தீர்த்தார்கள்.
சமூக வலைதளம் முழுவதும் அஜித்தின் அந்த ஒரு புகைப்படம் தான் மிகவும் ட்ரெண்டாகி வந்தன. இந்த நிலையில் இன்று திடீரென அஜித்தின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் எப்பவும் போல அஜித் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு சிக்னல் ரோடில் டிராவல் செய்யும் மாதிரியான அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: ராமராஜன் சந்தித்த கார் விபத்து!. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!.. தெரியாம போச்சே!…
சிக்னலில் நிற்பது அதன் பின் போவது என மாஸ் காட்டியிருக்கிறார் அஜித். அவரைப் பின்தொடர்ந்து ரசிகர்கள் அவரை வீடியோ எடுத்து செல்வது போல அந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ஒரு பக்கம் நடந்து கொண்டு வருகின்றது. குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படம் அதற்கு முன்பாகவே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த வீடியோ லிங்க: https://www.instagram.com/reel/C7gOl4YvOSS/?igsh=bnhxdHpvcnl6MmZo