விடாமுயற்சிக்கு பாய் பாய்!... கெத்தா இறங்கும் குட் பேட் அக்லி!... ஆனா இந்த படத்துக்கூட போட்டியா?!...

by ramya suresh |   ( Updated:2024-11-19 09:05:06  )
good bad ugly
X

good bad ugly

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது. நடிகர் அஜித், நடிகை திரிஷா, ஆரவ் உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: செம உஷாருதான் லோகேஷ்!… எப்படியெல்லாம் பிளான் போடுறாரு பாருங்க?!… கூலி பட அப்டேட்!…

இந்த திரைப்படத்தின் பேட்ச் ஒர்க் இன்னும் முடிவடையவில்லை. இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகிவிட்டார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை படுவேகத்தில் எடுத்து முடித்து விட்டார்.

படம் தொடங்கி சிறிது நாட்களிலேயே அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது. முதல் ஷெட்யூல், இரண்டாவது ஷெட்யூல் என்று ஜெட் வேகத்தில் இப்படத்தை எடுத்து முடித்து விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் இப்படத்தில் இருந்து நடிகர் அஜித்தின் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் தான் தற்போது பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. விடாமுயற்சி திரைப்படம் தான் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், குட் பேட் அக்லி திரைப்படம் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தால் முதலில் குட் பேட் அக்லி திரைப்படத்தை திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனென்றால் விடாமுயற்சி படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஒரு வாய்ப்பும் இல்லன்னாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல!.. ஓவர் ஆட்டம் போடும் விஷால்!…

அதற்கு காரணம் விடாமுயற்சி திரைப்படத்தின் லேட்தான். தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அப்படத்தை வெறுத்து விட்டார்கள் என்றே கூறலாம். மேலும் நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக தனது எடையை 20 கிலோ வரை குறைத்திருக்கின்றாராம். இந்த திரைப்படத்தில் பில்லா ஸ்டைலில் நடிகர் அஜித் இருப்பதாக பலரும் கூறி வந்தார்கள்.

இது ஒரு புறம் இருக்க இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது. மேலும் நடிகர் சியான் விக்ரமின் வீரதீர சூரன் திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறி வருகிறார்கள். இதில் எந்த படம் ஹிட் அடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story