GOAT-னா ஆடு.. சும்மா அறுத்து பிரியாணி போட்டு போயிட்டே இருப்போம்! மன்சூர் செம கலாய்!..

Published on: January 26, 2024
mansoor
---Advertisement---

Actor Vijay: தற்போது விஜய் அரசியலில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் இன்று தனது மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.அதன் படி தனது நிர்வாகிகளை டெல்லிக்கு அனுப்பி தனது கட்சியை பதிவுசெய்ய இருக்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் விஜய்தான் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் விஜய் குறித்தும் அவர் நடிக்கும் கோட் படத்தை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: விஷாலையே ஓவர்டேக் செய்த சிம்பு!.. இன்னும் அஜித் மட்டும் தான் பாக்கி.. விஜயகாந்த் வீட்டில் எஸ்டிஆர்!

வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தனது இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் சார்பாக பல்வேறு தொகுதிகளில் என் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள் என்று கூறிய மன்சூர் அலிகானிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் அரசியல் வருகை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு மன்சூர் அப்போ என்னை என்ன ஓட சொல்கிறார்களா? என வழக்கமான தன் பாணியில் கேட்டார். அதுமட்டுமில்லாமல் விஜய் தற்போது கோட் படத்தில் பிஸியாக இருக்கிறார். கோட் என்று சொன்னாலே எனக்கு பஹ்ராதான் நியாபகம் வரும். சும்மா அறுத்துப் போட்டு பிரியாணி சாப்பிட்டு போயிட்டே இருப்போம் என்று கிண்டலாக கூறினார்.

இதையும் படிங்க: இவர விட்டா இப்போ யாரு? அஜித்தின் அடுத்த வில்லன் இந்த நடிகர் தானா? மாஸா இருக்குமே…

மேலும் அவருடன் கூட்டணி என்பது நாளை. அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும் விடாமல் தொடர்ந்து விஜய் அவரது இயக்கம் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறாரே? அதை போல நீங்களும் செய்வீர்களா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கும் மன்சூர் சும்மா காய்கறி, நோட் புத்தகம் கொடுக்க அரசியல் பண்ண வரல. எனது நோக்கமே வேறு என சொல்லி சமாளித்தார் மன்சூர் அலிகான்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.