santhanam

நடிகர் சந்தானம் விஜய் டிவியில் லொள்ளு சபா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். அதன்பின் மன்மதன் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னடி காமெடி நடிகராக மாறினார் சந்தானம். ஆர்யா, ஜீவா, கார்த்தி, சிம்பு, உதயநிதி போன்ற பல இளம் நடிகர்களின் படங்களில் சந்தானம்தான் காமெடி செய்தார்..

சந்தானத்தின் காமெடிகளே பல திரைப்படங்கள் ஓடியது. குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட சில படங்களை சொல்ல முடியும்.
ஆனால் திடீரென ‘இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்.. காமெடி நடிகராக நடிக்க மாட்டேன்’ என முடிவெடுத்தார் சந்தானம். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அப்படி அவர் ஹீரோவாக நடித்த வெளியான படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் சந்தானம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை..

அதேநேரம் தற்போது கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் சந்தானம். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் காமெடி செய்திருக்கிறாராம் சந்தானம். இதை படக்குழு வெளியே செல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.. அதேநேரம் இது படம் முழுக்க வரும் காமெடியா இல்லை கேமியோ போல வந்து போகிறாரா என்பது படத்தை பார்த்தால்தான் தெரிய வரும்.

ஏற்கனவே ரஜினியின் எந்திரன் மற்றும் லிங்கா ஆகிய படங்கலில் சந்தானம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது