Connect with us

STR: இதனாலதான் ஃபாரின்ல சுத்துறேன்!.. ஒருவழியா சிம்பு சொல்லிட்டாரே!…

latest news

STR: இதனாலதான் ஃபாரின்ல சுத்துறேன்!.. ஒருவழியா சிம்பு சொல்லிட்டாரே!…

நடிகர் சிம்பு சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை, ஒளிப்பதிவு என பலவற்றிலும் தேர்ந்த அறிவு சிம்புவுக்கு உண்டு. அதேநேரம் சரியான நேரத்துக்கு சூட்டிங் போகாதது, பாதி படத்தில் நடித்துவிட்டு சம்பளத்தை சேர்த்து கேட்பது போன்ற விஷயங்களால் கெட்ட பெயர் எடுத்தார் சிம்பு. எனவே சிம்புவை வைத்து படம் எடுக்கவே பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் யோசித்தார்கள்.

இதனாலேயே மற்ற நடிகர்களை போல தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. அவரின் பத்து தல படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் படம் வெளியானது.. அந்த படமும் ஓடவில்லை.. தக் லைப் படத்திற்கு பின் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் சிம்பு துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளில் சுற்றிக்கொண்டிருந்தார். அவ்வப்போது லண்டனுக்கும் போகிறார்.. கடந்த பல மாதங்களாகவே அவர் துபாயில்தான் தங்கியிருக்கிறார்.. சினிமா ஷூட்டிங் என்றால் மட்டுமே அவர் சென்னை வருகிறார்..

இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சிம்பு ‘தாய்லாந்து ஸ்பெஷல் என சொல்லிவிட முடியாது.. மற்ற நாடுகளை குறிப்பிடும்போது இதுதான் பக்கத்துல இருக்குன்னு நினைக்கிறேன்.. இன்னொரு விஷயம் சென்னையில என்னால ஹாயா வெளிய சுத்த முடியல.. ரோட்லயே நடந்து போக முடியாது..

கடற்கரையில் ஒரு வாக்கிங் போக முடியாது.. வெளிநாட்டுக்கு போனா இதெல்லாம் என்னால பண்ண முடியுது.. இப்ப உடற்பயிற்சிகளை கவனம் செலுத்துறதுனால கிடைக்கிற நேரங்களில் இப்படி வெளியே எங்கேயாவது ட்ரிப் அடிச்சிடுவேன்’ என சொல்லியிருக்கிறார்..

To Top