---Advertisement---

எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசாதீங்க!.. சுதா கொங்கராவை நோஸ்கட் பண்ணிய எஸ்.கே!…

Published on: January 27, 2026
---Advertisement---

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. மணிரத்தினிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து சினிமாவை கற்றுக் கொண்டவர் இவர். சுதா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்திலும் கூட ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்த்தையும் அவரே இயக்கியிருந்தார்.

அதன்பின் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா போன்ற நடிர்களை வைத்து பராசக்தி என்கிற திரைப்படத்தை இயக்கினார்.. 1960களில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் ஜெயம் ரவி, அதர்வா, சிவகார்த்திகேயன் ஆகிய ஆகிய எல்லோரையும் அருகில் வைத்துக் கொண்டு ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் சுதா கொங்கரா ‘ கதையை வாங்கி முழுவதுமாக படித்துவிட்டு தயார்படுத்திக் கொண்டு நடிக்க வரும் நடிகர்கள் மிகவும் குறைவு.. ரவி மோகன் மணி சார் கூட ஏற்கனவே வேலை செஞ்சிருக்கார்.. அதனால கதையை படித்து பார்த்து தயார்படுத்திகொண்டு வரும் பழக்கம் அவரிடம் இருக்கு.. ஆனா சிவகார்த்திகேயனுக்கு இந்த பழக்கம் இல்லை’ என கூறினார்.

இதில் கோபமடைந்த சிவகார்த்திகேயன் ‘என் வாழ்க்கைய நீங்க பக்கத்தில் இருந்து மாதிரியே பேசுறீங்க.. நானும் கதையை படித்து பிரிப்பேர் பண்ணி நடிச்சிருக்கேன்.. அமரன், மாவீரன், மதராஸி படங்களில் நடிக்கும்போது ஃபுல் ஸ்கிரிப்ட் படிச்சிட்டு பிரிப்பேர் செய்துதான் நடித்தேன். விளையாட்டுத்தனமா பேசுறதால வேலை செய்யலைன்னு ஆகிடாது’ என்று கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்து ‘எஸ்.கே-விடம் மொக்கை வாங்கிய சுதா கொங்கரா’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.