Suriya Jyothika: எங்க காதலுக்கு காரணமே அந்த டைரக்டர்தான்.. உடைச்சி சொல்லிட்டாரே சூர்யா!…
சூர்யா ஜோதிகா காதலுக்கு காரணம்..

திரையுலகில் ஒன்றாக திரைப்படங்களில் நடித்து நட்பாகி அதன்பின் அது காதலாகி திருமணம் செய்து கொண்டவர்கள் சிலர். கமல்ஹாசன், பார்த்திபன், பாக்யராஜ், அஜித் ஷாலினி என சொல்லிக் கொண்டே போகலாம். அவர்களில் சூர்யாவும், ஜோதிகாவும் முக்கியானவர்கள்.
மெலே சொன்ன காதல் ஜோடிகளில் சிலர் திருமணத்திற்கு பின் அந்த உறவை முறித்துக் கொண்டனர். ஆனால் அஜித் – ஷாலினி போலவே சூர்யாவும் ஜோதிகாவும் மனம் ஒத்த தம்பதிகளாக வலம் வருகிறார்கள்.. இவர்களுக்கு தேவ் என்கிற மகனும், தியா என்கிற மகளும் உள்ளனர்..
சூர்யா இப்போதும் தன் மனைவி ஜோதிகா மீது அதே தீராத அன்போடும் காதலோடும் இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் கூட தங்களின் இருபதாவது திருமண விழாவை ஸ்காட்லாந்தில் அவர்கள் கொண்டாடினார்கள். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி அவர்கள் இருவரும் மீண்டும் திருமணமும் செய்து கொண்டனர்.
அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சூர்யா ‘எனக்கும் ஜோவுக்கும் இடையே காதல் வர காரணமே இருந்தவர் இயக்குனர் கௌதமன் மேனன்தான்.. காக்க காக்க படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது அற்புதமான காதல் காட்சிகளை வைத்து எங்கள் இருவரின் மனதிற்குள்ளே கிடந்த காதலை மேலே கொண்டு வந்து விட்டார்’ எனக்கு கூறியிருக்கிறார்.












