சும்மா ஒன்னும் 200 கோடி வாங்கல! விஜயின் ஆரம்ப கால சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க

Actor Vijay: இன்று விஜய் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். இதற்காக பலதரப்பட்ட ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் இருக்கின்றனர்.அது போக விஜய் இப்போது அரசியலில் கால் பதிக்க இருப்பதால் அவரது தொண்டர்கள் விஜயின் பிறந்த நாளான இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர்.

'50-வது வயதிலும் இன்னும் அதே 35 வயதிற்கேற்ற தோற்றம், ஆளுமையான குரல், குழந்தைகளையும் கவர்ந்தவர் ,இந்தியாவிலேயே சிறந்த நடன கலைஞர், ஏ ஆர் ரகுமான் இளையராஜா இசையில் பாடும் வல்லமை பெற்றவர், இசை வெளியீட்டுகளின் போது தன்னுடைய ரசிகர்களை தவறாமல் சந்திப்பது, பணிவானவர், தன்னம்பிக்கையோடு அரசியலில் குதித்தவர்' என விஜய்யை பற்றி அவருடைய ரசிகர் ஒருவர் உருகி எழுதிய ஒரு பதிவு தான் இது.

இதையும் படிங்க: ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

இப்படி விஜயை எங்கெங்கோ இருந்து ரசிகர்கள் ரசித்த வண்ணம் இருக்கின்றனர் .இன்று கோடி கணக்கில் இவருடைய படங்கள் வசூலில் வாரி இறைத்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் இவருடைய சம்பளமும் 200 கோடி என்ற அளவில் உயர்ந்து நிற்கின்றது. இந்த அளவு அதிக சம்பளம் வாங்கும் நிலையிலும் அரசியலில் தைரியமாக இறங்கி இருக்கும் விஜயை பலதரப்பட்ட மக்களும் சரி ரசிகர்களும் சரி திரை பிரபலங்களும் சரி பாராட்டி வருகிறார்கள்.

இவருடைய இந்த துணிச்சலுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றும் சொல்லி வருகிறார்கள். இப்படி 200 கோடி வாங்கும் விஜய் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் .அவர் முதன் முதலில் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் அவருக்கு உண்டான சம்பளம் வெறும் 500 ரூபாய் தான். அந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படிப்படியாக தன்னுடைய முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக மாறி இருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க:ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it