Connect with us
aarthi

Cinema News

யானை இளைச்சா நல்லாவா இருக்கும்? ஹீரோயினாக நடிகை எடுத்த ரிஸ்க் – கடைசில நடந்ததுதான் ட்விஸ்ட்

Actress Aarthi: தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. மனோரமா , கோவை சரளா இவர்கள் வரிசையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகையாக ஆர்த்தி வலம் வந்துகொண்டிருக்கிறார்,

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முதலில் இவருக்கு ஹீரோயினாக வேண்டும் என்பதே ஆசையாக இருந்ததாம்.

இதையும் படிங்க:சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…

பள்ளிப் படிப்பை முடித்து நேராக பாக்யராஜிடம் போய் நின்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன் உடல் எடையெல்லாம் குறைத்து அதற்காகவும் மெனக்கிட்டிருக்கிறார். உடல் எடையை குறைப்பதற்கு ஜிம்முக்கு போவது, நீச்சல் கற்றுக் கொள்வது, குதிரை ரைடு போவது என என்னெல்லாம் செய்ய வேண்டுமோ செய்து அவரது உட ல் எடையை குறைத்துக் கொண்டு பாக்யராஜை போய் பார்த்திருக்கிறார்.

ஆர்த்தியை பார்த்ததுமே பாக்யராஜ் ‘யானை இளைச்சா நல்லாவா இருக்கும்’ என்று சொல்லி எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை? முதலில் படிப்பை முடி. அதன் பிறகு பார்க்கலாம் என சொல்லி அந்த நேரத்தில் ஒரு சீரியல் தயாரித்துக் கொண்டிருந்தாராம் பாக்யராஜ்.

இதையும் படிங்க: தம்பிங்கறதுக்காக இப்படி எல்லாமா எழுத அனுமதிச்சார் இளையராஜா!… எந்தப் படத்தில் தெரியுமா?

அந்த சீரியலில் ஆர்த்தியை ஹீரோயினாக போட்டிருக்கிறார். அது மெகா சீரியல். மூன்று வருடம் ஓடியதாம். இது ஆர்த்திக்கு பெரும் சவாலாக இருந்ததாம். அதன் பிறகு ஒரு சமயம் மனோரமா ஆர்த்தியிடம் ‘ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று சொல்வதை விட்டு ஒரு நடிகையாக வேண்டும் என்று நினை ஆர்த்தி. ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொன்னால் 10 வருடத்தில் மக்கள் மறந்து விடுவார்கள். இதே நடிகை என்றால் அதற்கான அங்கீகாரம் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்’ என்ற அறிவுரையை வழங்கினாராம்.

aaar

aaar

அதிலிருந்தே அந்த எண்ணத்தை விட்டுவிட்டாராம் ஆர்த்தி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் இப்போது ஆர்த்தி நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹெலிகாப்டரை காட்டிய படம்! நூலிழையில் உயிர்தப்பிய சிவாஜி

google news
Continue Reading

More in Cinema News

To Top