ஜெயலலிதா தாயாரின் மறைவுக்கு எம்.ஜி.ஆர் காரணமா?!. கண்ணதாசனால் கடுப்பான பொன்மனச் செம்மல்!..
இயக்குனர் ஸ்ரீதர் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் எம்.ஜி.ஆரால் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் ஜெயலலிதா. முதல் படமான வெண்ணிற ஆடைக்கு பின் 2வது படமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தார். இந்த படம் ஜெயலலிதாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
அதன்பின் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் அடிமைப்பெண், நம் நாடு, குடியிருந்த கோவில், ஒளி விளக்கு, காவல்காரன், எங்கள் தங்கம், கண்ணன் என் காதலன் என பல படங்களிலும் ஜோடி போட்டு நடித்தார் ஜெயலலிதா. சரோஜாதேவிக்கு பின் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகையாக ஜெயலலிதா இருந்தார்.
இதையும் படிங்க: கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..
ஜெயலலிதாவின் வாழ்வில் ஒரு முக்கிய ஆளுமையாக எம்.ஜி.ஆர் இருந்தார் என்பது உண்மை. இதனால் மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்க முடியாமல் இருந்தார் ஜெயலலிதா. ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரையும் மீறி சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற நடிகர்களோடு நடிக்க துவங்கினார்.
இதனால், எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானார். ஆனாலும் அவரை தனது அரசியல் கட்சியில் சேர்த்து ஒரு முக்கிய பதவியை கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதை சரியாக பயன்படுத்திகொண்ட ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளர், மேல்சபை எம்.பி என பதவிகளை பெற்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறினார்.
இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..
1971ம் வருடம் அக்டோபர் 1ம் தேதி படப்பிடிப்பு முடிந்து ஜெயலலிதா வீட்டுக்கு சென்றபோது அவரின் அம்மா சந்தியா ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். சந்தியாவோ கவலைக்கிடமாக இருந்தார். அவருடன் ஜெயலலிதா இருந்தார். எம்.ஜி.ஆரும் அங்கு சென்று நலம் விசாரித்துவிட்டு சென்றார்.
அடுத்த நாள் சந்தியா இறந்து போனார். சில பத்திரிக்கைகள் சந்தியாவின் மரணத்தோடு எம்.ஜி.ஆரை தொடர்புபடுத்தி எழுதின. கவிஞர் கண்ணதாசன் ‘அலை ஓசை’ நாளேட்டில் ‘எம்.ஜி.ஆர் உள்ளும் புறமும்’ என ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் மரணத்திற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்பது போல் எழுதி இருந்தார். பின்னர் அந்த கட்டுரை 1974ம் வருடம் புத்தகமாகவும் வெளிவந்தது.
ஆனால், என் தாயின் மரணத்திற்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜெயலலிதா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.