விக்னேஷ் சிவனுடன் செம லவ்வு!.. அரை டவுசரில் ஜாலி பண்ணும் நயன்தாரா!.. வைரல் பிக்ஸ்!.

by சிவா |
விக்னேஷ் சிவனுடன் செம லவ்வு!.. அரை டவுசரில் ஜாலி பண்ணும் நயன்தாரா!.. வைரல் பிக்ஸ்!.
X

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகையாக மாறிய பலரில் நயன் முக்கியமானவர். ஐயா படத்தில் அறிமுகமான இவர் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

nayan

இதில், கடந்த 10 வருடங்களாக லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். விஜய், அஜித், ரஜினி போன்றவர்களுடன் டூயட் பாடினாலும் ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள அறம், மாயா, நெற்றிக்கண் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார்.

nayan

அதன்பின் சில வருடங்கள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். புது வருடத்தை கொண்டாட வெளிநாட்டுக்கு போவது, பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிடுவது என Chill செய்து வந்தனர். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

nayan

அதோடு, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறினர். ஒருபக்கம் படங்களை தயாரிப்பது, வினியோகம் செய்வது, புதிய தொழில்களில் முதலீடு செய்வது என பிஸியாக மாறினார்கள். இப்போது நல்ல அம்மாவாக தனது இரண்டு குழந்தைகளையும் கவனித்து வருகிறார் நயன்.

nayan

சமீபகாலமாக நயனின் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுவதில்லை. கடைசியாக வெளியான அன்னப்பூரணி படமும் தோல்வி அடைந்தது. அதேநேரம், அட்லி இயக்கத்தில் பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானுடன் நடித்த ‘ஜவான்’ படம் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

nayan

இந்நிலையில், வெளிநாட்டில் அரை டவுசர் அணிந்துகொண்டு கணவர் விக்கியுடன் ஜாலி பண்ணும் புகைப்படங்களை நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayan

Next Story