Biggboss Tamil 7
இவ்வளவு நாள் சும்மா இருந்தது இதற்குத்தானா? தினேஷ் வாழ்க்கையில் விளையாடிய ரட்சிதா
Serial Actress Ratchitha: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ரட்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அழகிலும் அறிவிலும் சிறந்த ஒரு நடிகையாகவே அறியப்பட்டார் ரட்சிதா.
பல சீரியல்களில் லீடு ரோலில் நடித்து வந்த ரட்சிதா சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்தார். சிறிது நாள்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தினேஷை விட்டு ரட்சிதா வெளியேறினார்.
இதையும் படிங்க: அயலான் படத்தினை விஜயகாந்த் ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாதாம்!… என்ன நடந்துச்சு தெரியுமா?
அதன் காரணமாக ரட்சிதாவும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார். இப்போது தினேஷும் இந்த சீசனில் ஒரு ஃபைனலிஸ்ட் போட்டியாளராக வெற்றிப் பெற்றிருக்கிறார். தினேஷ் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த காரணமே அவரை பற்றி மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும்,
மீண்டும் ரட்சிதாவுடன் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். அதன் படி தினேஷையும் மக்கள் ஒரு நல்ல போட்டியாளர், ஒரு நல்ல மனிதர் என்பதை போலத்தான் சமூக வலைதளங்களில் அவருக்கு சார்பாக பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க:விஜய்க்கு ஜோடியானதும் கிளாமர் கூடிடுச்சி!.. புடவையில் சுண்டி இழுக்கும் சினேகா!..
இந்த நிலையில் இன்று தினேஷ் எவிக்ட் ஆகி வெளியேறுவார் என்று தெரிகிறது. நாளை நடக்கப் போகும் அந்த ஃபினாலே போட்டியில் யார் அந்த டைட்டில் வின்னரை பறிக்க போகிறார் என்பதும் இன்னும் இரு தினங்களில் தெரிய வரும்.
இதற்கிடையில் தினேஷை பற்றி நல்ல விதமாக புரிந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக ரட்சிதா திடீரென ஒரு பதிவை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதாவது ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி இதில் உள்ளதை போலத்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
கதவுக்கு வெளியே தன்னை நல்லவனாக காட்டிக் கொள்பவரை கதவை சாத்திக் கொண்டு பார்த்தால்தான் அவரது உண்மையான முகம் தெரியும். அவர் ஒரு கல்ப்ரிட். பொய்யையே பேசுபவர். சுய நலம் பிடித்தவர் என அந்த புத்தக்கத்தில் ஒருவரை பற்றி பதிவிட்டிருப்பதை சுட்டிக் காட்டி இதே போல்தான் தினேஷும் என்பது போல் கூறியிருக்கிறார்.
ஆனால் இது நாள் வரை தினேஷை பற்றி கூறாத ரட்சிதா ஃபினாலே நெருங்கும் போது இந்த மாதிரி பதிவை போட்டிருப்பது அவருடைய வெற்றிக்கும் தடையாக இருக்கும். இதை யோசித்தேதான் ரட்சிதா அப்படி செய்திருப்பார் என்று கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன.