வெளுத்து வாங்கிய நிருபர்! உண்மையை போட்டுடைத்த ஷகீலா.. இப்படி பயந்துட்டாங்க
Shakeela: மலையாள சினிமாவில் முதன் முதலில் அறிமுகமாகி பல கிளாமர் படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர் நடிகை ஷகிலா. கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் இவர் நடித்திருக்கிறார். இவர் நடித்த எல்லா படங்களுமே கிளாமர் படங்கள் தான். வறுமையின் காரணமாக தன் குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு போக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார் ஷகிலா.
ஆரம்பத்தில் ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். ஆனால் குடும்ப வறுமை சூழல் அவரை இந்த நிலைமைக்கு தள்ளியது. அதனால் இதுதான் நமக்கு கிடைத்த ஒரே வழி என நினைத்து தொடர்ந்து கிளாமர் படங்களிலேயே நடித்தார் ஷகீலா.
இதையும் படிங்க: ஷாரூக்கானை மிஞ்சிய விஜய்! இந்திய அளவில் முதலிடத்தை பிடிக்கும் தளபதி
இந்த நிலையில் மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹேமா கமிட்டி பற்றியும் ஷகிலா பேசியிருந்தார். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் முக்தார் ஷகிலாவிடம் நேர்காணல் எடுத்த போது இதுவரை சொல்லாத சில தகவல்களை ஷகிலா அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார் .அதற்கு காரணம் பத்திரிக்கையாளர் முக்தார் கேள்வி கேட்ட விதம்தான்.
சினிமா, படம் ,நடிகை என்பதையெல்லாம் தாண்டி இப்போது ஷகீலா youtube சேனலிலும் ஆங்கராக பணியாற்றி வருகிறார். எத்தனையோ பேரிடம் அவர் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு வாயடைக்க வைத்திருக்கிறார். ஆனால் இன்று ஷகிலாவையே வாயை மூட வைத்திருக்கிறார் முக்தார். அந்த அளவுக்கு பல கேள்விகளைக் கேட்டு இதுவரை சொல்லாத உண்மைகளை சொல்ல வைத்திருக்கிறார் முக்தார்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
அதாவது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஷகீலாவிடம் கேட்டார் முக்தார். அதற்கு ஷகிலா அட்ஜஸ்ட்மென்ட் முற்றிலும் தவறு. அதுவும் இயக்குனர்கள் நடிகர்கள் டெக்னீசியன்கள் என அனைவரும் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு படத்தில் கமிட் ஆகும்போதே மேனேஜர் இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே என்றால் நடிக்க வாருங்கள் என்ற சொல்லி தான் கூப்பிடுகிறார் என ஷகிலா கூறினார்.
அப்போ உங்களை எத்தனை பேர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் முக்தார் கேட்டார். அதற்கு ஷகிலா நிறைய பேர் அழைத்து இருக்கிறார்கள். ஆனால் நான் போக மாட்டேன். ஆனால் அழைத்தவர்களில் யார் எனக்கு பிடிக்கிறதோ அவர்களுடன் தான் போவேன் என மிக வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோவா டிரிப் பாடகியிடம் மடங்கிய ஜெயம் ரவி… இதனால்தான் ஆர்த்தி ரவியிடம் விவாகரத்தா?
அப்போ இதற்கு பெயர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லையா என கேட்டபோது இது எப்படி அட்ஜஸ்ட்மென்ட் ஆகும் நான் விரும்பித்தானே போகிறேன் என ஷகிலா கூறினார். அப்போ விரும்பி போனது எத்தனை பேரிடம் என கேட்டபோது அது 7, 10 பேர் இருப்பாங்க என்று பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் .
ஒரே ஒரு நடிகரை மட்டும் தான் காதலித்தாராம். ஆனால் 10 பேரிடம் என்னுடைய ஆசையை தீர்த்து இருக்கிறேன் என ஷகிலா கூறி இருக்கிறார். ஆனால் இது தவறு இல்லை. ஆண்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் தான் தவறு என்பது மாதிரி பேசி இருக்கிறார்.
விரும்பி போறது வேற. வலுக்கட்டாயமாக அழைப்பது வேறு என அட்ஜஸ்ட்மென்டுக்கு புது விளக்கம் அளித்திருக்கிறார் ஷகிலா. இந்த நிலையில் இப்போது கூட தன் வயதில் சிறிய ஒருவரிடம் பழகிக் கொண்டு வருகிறாராம் ஷகீலா. தன்னைவிட சின்ன பையன். என்னுடைய பாய் பிரண்டாக வைத்திருக்கிறேன். அவனையும் இப்பொழுது நான் விடப் போகிறேன். ஏனென்றால் அவனுக்கு கல்யாணம் ஆக வேண்டும் .பாவம் அவனாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு போகட்டும். அடுத்து வேற ஆள் இருந்தா பார்ப்போம் என மிக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.