எப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரானாலும் நோ தான்! கறாரா சொன்ன த்ரிஷா

by Rohini |   ( Updated:2024-08-13 14:46:12  )
trisha
X

trisha

Trisha: தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது கோடம்பாக்கத்தின் டிரெண்டிங்கான நடிகையே த்ரிஷாதான். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட் நடிகை என்றே சொல்லலாம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் த்ரிஷாவுக்கு ஒரு பெரிய கம்பேக்காக அமைந்தது. கடைசியாக 96 படத்தில் நடித்த த்ரிஷா பெரிய வெற்றியை கொடுத்தாலும் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த படங்களும் வெளியாகவில்லை. அதே வேளையில் பொன்னியின் செல்வன் படத்தில் நீண்ட நாள்களாக நடித்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: சீரியலில் இருந்து இப்படி ஒரு ஜாக்பாட்டா? பிரபல இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்த சூப்பர் சம்பவம்…

படம் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்தது. அதில் த்ரிஷாவின் அழகு ஐஸ்வர்யா ராயின் அழகை விட ரசிக்கும் படியாக அமைந்தது. அதனாலேயே த்ரிஷா சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கானார். அதனை தொடர்ந்து லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி இணைகிறது என்ற வகையில் த்ரிஷா மீது அனைவரின் பார்வை திரும்பியது. அந்தப் படத்திற்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்தார். ஏற்கனவே அஜித் - த்ரிஷா ஜோடி சூப்பர் ஹிட் ஜோடி என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள். ஐந்தாவது முறையாக விடாமுயற்சி படத்தின் மூலம் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா.

இதையும் படிங்க: சஸ்பென்ஸ் இல்லாமலே சாவு… கோட் படத்தின் மீது ரஜினிக்கு இவ்வளவோ வன்மமா?

அதோடு தக் லைஃப் படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து பேக் டூ பேக் பெரிய படங்களில் கமிட் ஆன த்ரிஷாவை பற்றிய ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

chennai

chennai

அதாவது ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். படம் ஹிந்தி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த படம் .அந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடல் 1234 என்ற பாடல்.

இதையும் படிங்க: எஸ்.கே.வுக்காக கமல் எடுக்கும் பெரிய ரிஸ்க்!.. எங்க போய் முடியுமோ தெரியலயே!..

அதில் பிரியாமணி ஆடியிருப்பார். ஆனால் அதற்கு முன் அந்த பாடலுக்கு த்ரிஷாதான் ஆட வேண்டியதாம். ஆனால் என்னால் முடியாது என த்ரிஷா சொன்னதால் பிரியாமணிக்கு அந்த வாய்ப்பு போனதாக த்ரிஷாவே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

Next Story