எல்லாரும் டைவர்ஸ் பண்றாங்க!. எதுக்கு கல்யாணம்?.. இப்படி சொல்லிட்டாரே திரிஷா!..

X

Actress trisha: மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் திரிஷா. இவரின் அப்பா நட்சத்திர ஹோட்டலில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். துவக்கத்தில் மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என பேட்டியெல்லாம் கொடுத்தார்.

ஆனால், ஜோடி படத்தில் சிம்ரனின் 4 தோழிகளில் ஒருவராக கூட்டத்தில் நிற்கும் வேடத்திலெல்லாம் நடித்தார். அதன்பின்னரே லேசா லேசா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரிதாக நடிப்பு வரவில்லை என்றாலும் அழகை காட்டி ஒருமாதிரி சமாளித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த வெற்றிவசந்த் – வைஷ்ணவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். நயன்தாராவுக்கு சீனியர் இவர். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர். தெலுங்கிலும் சிரஞ்சீவி போன்ற பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஒருகட்டத்தில் இவரின் படங்கள் தோல்வியை தழுவவே நயன்தாரா இவரை ஓவர்டேக் செய்து முன்னணி நடிகையாக மாறினார். அதன்பின் திரிஷா பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே மீண்டும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

Trisha

விஜயுடன் லியோ படத்தில் நடித்த திரிஷா இப்போது அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் போட்டி நடிகையான நயன்தாரா திருமணம் செய்து கொண்டு அம்மா ஆகிவிட்ட நிலையில் திரிஷா இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது அவருக்கு 41 வயது ஆகிறது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் தனது திருமணம் பற்றி பேசிய திரிஷா ‘இப்போதெல்லாம் நிறைய பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வதற்கு திருமணம் செய்யாமலே இருப்பது நல்லது. சரியான நபருக்காக காத்திருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

தனுஷ், ஜிவி பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி என திரைத்துறையில் பலரும் தங்களின் மனைவியை பிரிந்ததை மனதில் வைத்தே திரிஷா இப்படி சொல்லியிருக்கிறார் என கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வேற லெவல்!.. எஸ்கே-வை கவுரவித்த ஆர்மி ஆபிஸர்ஸ்!.. அமரனாக கிடைத்த அங்கீகாரம்!..