பாலியல் புகாரில் சிக்கிய 3 முக்கிய பிரபலங்கள்!.. ஆனாலும் ஒன்னும் பண்ண முடியலயே!..

by சிவா |
arjun
X

பொதுவாக பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது எல்லா துறையிலும் இருக்கிறது. பேருந்தில் செல்லும் பெண்கள் கூட பாலியல் சீண்டல்களை சந்திப்பதுண்டு. பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் என எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது இருக்கிறது.

பல வருடங்களாக பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். ஆனால், எல்லோரும் தண்டிக்கப்படுகிறார்களா என்பதுதான் இல்லை. ஏனெனில் சட்டத்திற்கு ஆதாரம் வேண்டும். சினிமாத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது அதிக அளவில் இருக்கிறது. அதற்கு பல ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம் ‘வாய்ப்பு’ என்பதுதான்.

இதையும் படிங்க: உச்சத்தில் வர வேண்டிய நடிகை… விபச்சார வழக்கால் தொலைந்த வாழ்க்கை…

அதோடு, ‘என்னிடம் இவர் இப்படி நடந்து கொண்டார்’ என வெளியே சொன்னால் யாரும் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். திரையுலகில் எல்லோரும் அப்படி இல்லை என்றாலும் சிலர் இன்னமும் அப்படித்தான் இருக்கிறார்கள். அதேநேரம், சொல்லப்படும் பாலியல் புகார் உண்மையிலேயே நடந்ததா இல்லை கவன ஈர்ப்புக்காகவும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டும் அது நடந்ததா? என்பது புகார் சொல்பவருக்கே வெளிச்சம்.

அப்படி திரையுலகில் பாலியல் புகாரில் சிக்கிய 3 பிரபலங்கள் பற்றி பார்ப்போம். முதலில் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் எந்த பாலியல் புகாரிலும் சிக்கவில்லை. ஆனால், பாடகி சின்மயி ‘வைரமுத்து என்னை தவறான நோக்கத்தில் அழைத்தார்’ என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். டிவிட்டரில் பல பதிவுகளை போட்டார். ஆனால், வைரமுத்து எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: என் படத்தை பாக்க மாட்டேனு சொல்லிட்டாரு! ரஜினி பற்றி பகத்பாசில் சொன்ன சீக்ரெட்

ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தும் அவர் மீது எந்த நடிகையும் பாலியல் புகாரை சொல்லவில்லை. ஆனால், நிபுணன் என்கிற படத்தில் அவருடன் நடித்த சுருதி ஹரிஹரன் என்பவர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நீதிமன்றம் வரை அவர் சென்றும் ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

sruthi

தெலுங்கில் அதிரடி படங்களில் நடித்து வருபவர் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. நிஜவாழ்க்கையிலேயே ரசிகர் ஏதேனும் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொண்டால் பொது இடம் என கூட பார்க்காமல் பளார் என அறை விடுவார். தமிழ் பட நடிகை விசித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பாலையா தன்னுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது கணவர் மட்டுமே தனக்கு துணையாக நின்றதாகவும் கூறி இருந்தார். ஆனால், பாலையா எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை.

இது போக ஸ்ரீரெட்டி என்பவர் விஷால், ராகவா லாரன்ஸ், உதயநிதி என பலர் மீது பலரும் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திகொண்டதாக சொல்லி பரபரப்பை பற்ற வைத்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

Next Story