ஜோதிகா வொர்க் அவுட் மட்டும்தான பாத்தீங்க! இடுப்பழகி இளமையின் ரகசியத்தை பாருங்க
Actress Simran: இடுப்பழகி என அனைவராலும் பாராட்டப்படும் நடிகை சிம்ரன். விஜய் நடித்த லவ் டுடே என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்ரன் தொடர்ந்து அஜித் விஜய் விஜயகாந்த் சூர்யா சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.
கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாக டாப் நடிகையாகவே வலம் வந்தார் சிம்ரன். இவர் இருக்கும் சமயத்தில் வேறு எந்த நடிகையாலும் பெரிய உச்சத்தை அடைய முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட நடிகையாக இருந்தார்.
இவருக்கு என ஒரு தனி கிரேஸ் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சினிமாவில் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இன்றுவரை இளமையாகவே இருக்கிறார் சிம்ரன். சமீபத்தில் வெளியான அந்தகன் திரைப்படத்தில் கூட ஜோடி படத்தில் நடித்த சிம்ரன் மாதிரியே தான் தோன்றியிருந்தார்.
இரண்டு மகன்களுக்கு அம்மாவாக ஆன பிறகும் எப்படி சிம்ரன் மட்டும் இந்த அளவு தன்னுடைய இளமையை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்று தெரியவில்லை. இவருக்கு போட்டி நடிகையாக இருந்து வந்த ஜோதிகா ஒரு கட்டத்திற்கு மேலாக மிகவும் குண்டாக இருந்தார்.
அதன் பிறகு திருமணம் ஆனதும் வொர்க் அவுட், ஜிம் என தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு இப்போது மிகவும் ஸ்லிம்மாக மாறி இருக்கிறார் ஜோதிகா. அதே மாதிரியான ஒரு சிம்ரனின் வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் உடற்பயிற்சி நிலையத்தில் எப்படி சிம்ரன் ஒர்க் அவுட் செய்கிறார் என்பது போன்று அந்த வீடியோவில் வெளியாகி இருக்கின்றது.
சிம்ரன் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். தன் கணவருடன் சேர்ந்து ஒரு படத்தை தயாரிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தில் சிம்ரன் லீடு ரோலில் நடிக்கவும் செய்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C_0Np0vtLxH/?igsh=Y2J2cDFtMXQ0ZXU0