Toxicன் சோலி முடிஞ்சது… அடுத்த 2 படங்களின் புக்கிங் துவங்கியாச்சு!

X
Toxicன் சோலி முடிஞ்சது… அடுத்த 2 படங்களின் புக்கிங் துவங்கியாச்சு!

இந்த வாரத்தின் முதல் ரிலீஸ் ஆக ‘டாக்ஸிக்’ இன்று (ஆகஸ்ட் 26) வெளியானது. யாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார்.

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல், ரசிகர்களை ரொம்பவும் சோதித்து விட்டது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் கதறி வருகிறார்கள்.

தற்போது, இந்த வாரம் அடுத்து வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘ஹாய்’ என இரண்டு படங்கள் திரைக்கு வருகிறது. இவ்விரண்டு படங்களுக்கான டிக்கெட் புக்கிங்கும் இன்று முதல் தியேட்டர்களில் ஓபன் பண்ணி விட்டார்கள்.

இதில் ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ளனர். ‘ஹாய்’ படத்தில் கவின், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.