இன்னைக்கு வேற சட்டை!.. கேரவன் மேல ஏறி மீண்டும் ரசிகர்களுக்கு கையசைத்த விஜய்!.. வைரலாகும் வீடியோ!..

நடிகர் விஜய் சென்னையில் தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், தினம் தோறும் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்து விட்டார் என்றே தெரிகிறது. உடல் எடையை குறைத்து மீசை, தாடியெல்லாம் ஷேவ் செய்து ஸ்லிம் லுக்கில் சிம்பு, சிவகார்த்திகேயனுக்கே டஃப் கொடுத்து வருகிறார் விஜய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் தளபதி தரிசனத்துக்காக ரசிகர்கள் அந்த இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததும் பாக்கியராஜ் செய்த முதல் வேலை!. இப்படி யாருமே யோசிக்க மாட்டாங்க!..

தன்னை காண வரும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக தொடர்ந்து நடிகர் விஜய் கேரவன் மீது ஏறி ரசிகர்களை கண்டு வணக்கம் தெரிவித்தும், கையசைத்தும், ரஞ்சிதமே கிஸ் கொடுத்தும் வருகிறார்.

நேற்று வெள்ளை சட்டையில் ஆள் அடையாளமே தெரியாமல் விஜய் வந்த நிலையில், இன்று கலர் கலர் சட்டையை அணிந்துக்கொண்டு விஜய் அதே போல கேரவன் மீது ஏறி ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: மாமனார் மாமியாருக்கு பர்ச்சஸ் பண்ண வந்த பாலா.. கூட வந்த பொண்ணு யாரு?.. வைரல் வீடியோ..

சென்னையில் முழுக்க செட் போட்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் மகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காட்சிகள் தான் எடுக்கப்பட்டு வருவது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

ஓடிடி உரிமம் இந்த படத்திற்கு அதிக தொகைக்கு விற்கப்பட உள்ளதாகவும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Related Articles

Next Story