Home latest news Ajith: இது தியேட்டர் இல்ல!. ஒழுங்கா இருங்க!. ரசிகரை திட்டிய அஜித்!… வீடியோ வைரல்!…

Ajith: இது தியேட்டர் இல்ல!. ஒழுங்கா இருங்க!. ரசிகரை திட்டிய அஜித்!… வீடியோ வைரல்!…

ajith (1)
ajith (1)

கார் ரேஸில் ஒரு பக்கம் அஜித் பிஸியாக இருந்தாலும் அவர் நடிக்க இருக்கும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என ஆதிக்கை கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு முன் ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. அந்தப் படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தது.

அதனால் அந்தப் படத்தை பெரியளவில் கொண்டாடி வந்தனர். மீண்டும் அதே கூட்டணி எனும் போது இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் முந்தைய படம் மாதிரி இல்லாமல் இந்தப் படம் சென்டிமென்ட் கலந்த அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் படமாக இருக்கும் என ஆதிக் கூறியிருக்கிறார். பிப்ரவரியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அஜித் இன்னும் ரேஸில்தான் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் ஒரு வேளை மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேஸ் சர்க்யூட்டில் திரைப்பிரபலங்கள் பலரும் வந்து அஜித்தை உற்சாகப்படுத்திவிட்டு செல்கின்றனர். ஜிவி பிரகாஷ், அனிருத், நயன்தாரா, வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் யேசுதாஸ், ஸ்ரீலீலா, மஞ்சு வாரியார், பிரியா வாரியார் என முன்னனி நட்சத்திரங்கள் அஜித்தை சந்திக்க படையெடுத்து வருகின்றனர்.

முதலில் அஜித்தை பார்க்க திரண்ட கூட்டம் இப்போது அந்தப் பிரபலங்களை பார்க்க இன்னும் கூடுதலாக வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் திரளுவதால் ரேஸ் சர்க்யூட்டிலும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அஜித்தை பொறுத்தவரைக்கும் தன்னால் மற்ற அணியினருக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

அதனால் ரசிகர்களை தொடர்ந்து எச்சரித்தும் வருகிறார் அஜித். இந்த நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் செய்த செயலால் அஜித் கடுப்பாகி ‘இது ஒன்னும் தியேட்டர் கிடையாது. ஒழுக்கமாக இருங்க ’ என கோவமாக எச்சரித்த வீடியோதான் இப்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/DUix4zUj8FN/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

Previous articleகாதலர் தின ஸ்பெஷல்!.. இந்த வாரம் வெளியாகும் 3 ரீ-ரிலீஸ் திரைப்படங்கள்!….
Next articleநைட் ரஜினியோடு பைக்கில் சுற்றும்போது!.. ராதிகா சொன்ன பிளாஷ்பேக்!…