தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனரை அசிங்கப்படுத்திய அஜித்… ஆனா இப்படிலாமா பேசுவீங்க?..

Published on: February 19, 2024
---Advertisement---

Ajithkumar: சமீபகாலமாவே அஜித் குமார் செய்யும் எல்லா விஷயங்களும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட தன்னுடைய இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்   இதில் அஜித் குமார் தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு பிரபல இயக்குனரை அசிங்கமாக விமர்சித்த ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

 அமராவதி திரைப்படம் மூலம் கோலிவுட்டுக்குள் வந்தவர் அஜித் குமார். சின்ன சின்ன படங்களில் தொடங்கிய அவர் பயணம் இன்று தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார், தல என பல அடையாளங்களை அவருக்கு பெற்று கொடுத்திருக்கிறது. இருந்தும் ஒரு கட்டத்தில் தன்னுடைய மொத்த ரசிகர் மன்றத்தையும் கலைத்தவர். 

இதையும் படிங்க: பாக்கியாவை வச்சி வாங்கும் ஈஸ்வரி…உங்களுக்கு தேவை தான்.. வம்பை இழுத்துவிட்டுக்கிறதே வேலையா போச்சு…

என்னை எந்த அடையாளம் கொண்டும் அழைக்க வேண்டாம் என அறிக்கை விட்டவர். மொத்தமாக மீடியாக்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தும்  சமீப காலமாக அவரின் பல புதிய புகைப்படங்கள் தொடர்ந்து ரிலீசாகி கொண்டே இருக்கிறது.  இதில் அவர் ரசிகர்கள் ரொம்பவே குஷியாகி  விடுவார்கள் என அவரின் கணிப்பு இப்போது பொய்த்து விட்டது.

 முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்தின் இறப்புக்கு வராமல் இருந்ததும் அந்த நேரத்தில் துபாயில் அவர் போட்ட  டான்ஸ் வீடியோ வைரல் ஆனது என அஜித் மீதான சர்ச்சை தொடங்கியது. சினிமாவில் இருக்கும் அஜித் நன்றி என்பதே இல்லாமல் இருப்பதாகவும் அதை மறந்தே செயல்படுவதாகவும் பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டிடியால் கதறி அழும் சகோதரி! கடைசில என் மடியிலேயே கைவச்சிட்டீங்களே – ஐயோ இப்படி ஆகிப் போச்சே

அஜித்துக்கு முதல் முதலாக தல என்ற பட்டத்தை வாங்கி கொடுத்த திரைப்படம் தீனா. அப்படத்தினை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ்.  படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது ஆனால் படத்துக்கு முருகதாஸுக்கு கிடைத்த சம்பளம் சொற்ப இலட்சங்கள் மட்டுமே.  ஆனால் அதன் பின்னர் அஜித் மற்றும் முருகதாஸின் சினிமா கேரியர் உச்சத்துக்கு போனது.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணையலாம் என முடிவெடுக்கப்பட்டது அதற்கு முருகதாஸின் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் பேசப்பட்டிருந்தது.  அந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அஜித்திடம் இந்த விஷயத்தை தயாரிப்பு நிறுவனம் சொல்லினர். தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு இயக்குனர் இவ்வளவு உயர்ந்திருக்கிறார் என நினைத்திருக்கலாம்.

 ஆனால் அஜித் அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை கட்டு கட்டாக அடுக்கி பாருங்கள் அதன் உயரத்துக்கு கூட முருகதாஸ் வரமாட்டார் அப்படி வந்தா அவருக்கு இந்த சம்பளத்தை கொடுங்க என மோசமாக விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பிட்ட அந்த படம் நடக்காமலே போனதாக தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ஃபிலிமே இல்லாம ஷூட்டிங்! வடிவேல் காமெடி மாதிரில்ல இருக்கு!. கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பாரதிராஜா!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.