வண்டியை இப்படிதான் ஓட்டணும்!. கிளாஸ் எடுக்கும் அஜித்குமார்!.. மரணமாஸ் வீடியோ!...
நடிகர் அஜித் பைக் ரேஸில் ஆர்வமுடையவர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்க துவங்கிய போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் பைக் ரேஸ் செய்து வந்தார். சில சமயம் அதில் அடிபட்டு சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.
முதுகில் சில அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டார். பைக் ரேஸ் மட்டுமில்லை. கார் ரேஸிலும் அதிக ஆர்வமுள்ளவர் அஜித். சில போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டார். மேலும், பைக் பந்தயத்தில் கலந்துகொள்வதையும் நிறுத்திவிட்டார்.
இதையும் படிங்க: என்னங்க இவரு மறுபடியும் கிளம்பிட்டாரு போலயே… அஜித்தால் புலம்பும் ஆதிக்…
அதேநேரம், ஷூட்டிங் இல்லாத நாட்களில் பைக்கில் பல மணி தூரங்கள் பயணம் செய்வதை பழக்கமாக கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாவதுண்டு. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு முன்பும் பைக்கை எடுத்துகொண்டு பல நாடுகளுக்கும் போனார் அஜித் குமார்.
இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது. அதன்பின் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 3 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின் நிதி நெருக்கடியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பின் சென்னை வந்த அஜித்தின் காதின் அருகே ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…
எனவே மீண்டும் அஜித் பைக்கை ஓட்ட கிளம்பிவிட்டார். அஜித்துக்கென ஒரு கேங் இருக்கிறது. அவர்களுடன் இணைந்து அஜித் பல நாடுகளிலும் பைக் ஓட்டி வருகிறார். தற்போதும் அது போல கிளம்பிவிட்டார். ஏற்கனவே, அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அஜித் மீண்டும் ஃபிட் ஆகிவிட்டார் என சொல்லி இருந்தார்.
இந்நிலையில், தனது கேங்கில் உள்ள ஒருவருக்கு பைக்கை எப்படி ஓட்ட வேண்டும் என சில அறிவுரைகளை அஜித் சொல்லும் வீடியோவை சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/C4uqV9tSbPX/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==