Connect with us
ajith

Cinema News

சோலோவா பின்னி பிடலெடுக்கும் தல! வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் இதோ

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வந்த அஜீத் ஒன்றரை வருடமாக இழுபறியில் இருந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதால் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து நேராக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் அஜித்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா, அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. பல பிரச்சனைகளைத் தாண்டி இப்போதுதான் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் குட் பேட் அக்லி திரைப்படத்தை பற்றிய ஒரு அப்டேட் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: இப்போ அதைக் கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது… கமலையே திணற வைத்த கேள்வி என்ன?

அதாவது ஒரு ஆங்கில பத்திரிக்கையில் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா குட் பேட் அக்லி படத்தை பற்றி பேசிய ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. குட்பேடு அக்லி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அதனுடைய முதல் கட்ட படப்பிடிப்பு 24 நாட்களில் நடந்து முடிந்திருக்கிறதாம். அதில் இரண்டு சண்டை காட்சிகள், ஒரு பாடல் காட்சி அதன் பிறகு சில டாக்கி போர்ஷன் போன்றவைகள் முடிக்கப்பட்டு இருக்கிறதாம்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 20ஆம் தேதி ஆரம்பமாக உள்ளதாக சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார். அதுவும் சவுத் அமெரிக்காவில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இதில் கூடுதலான விஷயம் என்னவென்றால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தை தவிர வேறு எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையாம்.

இதையும் படிங்க: நயன்தாரா பண்ண அநியாயத்தை பார்த்தீங்களா!.. அதர்வாவுக்காக இப்படி இறங்கி வந்திருக்காரே!..

அதனால் சோலோவாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக பட்டு இருக்கிறதாம். இந்த ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. ஆனால் சமூக வலைதளங்களில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நயன்தாராவும் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இன்னும் ஒரு வாரத்தில் அல்லது இரண்டு தினங்களில் படத்திற்கான நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகிவிடும் என்று அந்த நாளிதழில் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top