நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என நிறைய பிடித்த விஷயங்கள் இருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். மலேசியாவில் சமீபத்தில் போட்டியில் அடுத்து துபாயில் மீண்டும் துவங்க உள்ளது. இதற்காகவே அஜித்குமார் கார் ரேஸிங் என்கிற நிறுவனத்தையும் அவர் துவங்கவிருக்கிறார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் அஜித் நடித்தது சர்ச்சை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் Campa Cola Enger drink விளம்பர படத்தில்தான் அஜித் நடித்திருந்தார். ‘மக்களின் உடல்நிலையை பாதிக்கும் குளிர்பான விளம்பரத்தில் அஜித் எப்படி நடிக்கலாம்?’ என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்.
ஆனால், அதற்குள் அஜித் அடுத்த விளம்பர படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். Nova Real Estate என்கிற நிறுவனத்திற்கான விளம்பர படத்தில்தான் அஜித் நடிக்கவுள்ளாராம். இந்த விளம்பர படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. விடாமுயற்சி படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஓம்பிரகாஷ்தான் இந்த விளம்பர படத்தையும் எடுக்கவுள்ளாராம்.
அஜித் கார் ரேஸிங் செய்வதற்கு ஒரு சீசனுக்கு 25 முதல் 45 கோடி வரை செவவாகும். அதற்கு ஸ்பான்சர் வேண்டும் என்பதற்காகவே அஜித் விளம்பர படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
