அஜித்னாலதான் டைரக்‌ஷனே பண்ணல! அவர் சொன்ன ஒரு வார்த்தை.. யாருய்யா இவரு?

By :  ROHINI
Published On 2025-05-29 12:40 IST   |   Updated On 2025-05-29 12:42:00 IST

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து இன்று மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்திருக்கிறார். தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். இவர் சினிமாவிற்கு வரும்போது கார் ரேஸ் பைக் ரேஸ் இதில் அதிக ஈடுபாடு கொண்டவராக தான் இருந்தார்.

எப்படியாவது ரேசில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்து கொண்டு வந்தன. அது இப்போது ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றது. நடிகராக கார் ரேஸராக ரசிகர்களின் உள்ளங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து விட்டார் அஜித். அஜித்தை பற்றி பேசும்போது பல பிரபலங்கள் குறிப்பிடுவது என்னவெனில் அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதிலிருந்து எப்போதும் மாறவே மாட்டார்.

அந்த வார்த்தையை மீறவும் மாட்டார் என்பதுதான். அது எப்பொழுது சொன்னாலும் அதை மறக்கவும் மாட்டார் என்று பல பிரபலங்கள் கூறி இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்தின் மகன் ஒரு விழா மேடையில் அஜித்தை பற்றி சில சுவாரசியமான சம்பவங்களை கூறியிருக்கிறார். ஏ எம் ரத்தினத்தின் மகன் முதலில் இயக்குனராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம்.

இதை அஜித்திடமும் ஒருமுறை சொல்லி இருக்கிறார். அப்போது அஜித் உன் அப்பாவிற்கு பிறகு தயாரிப்பு பணிகளை நீதான் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு எப்போதும் நீ ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறியதனால் தான் டைரக்ஷன் பணியை நான் நிறுத்திவிட்டேன். என் அப்பாவின் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொண்டேன். ஆனால் அவர் சொல்லும் பொழுது என்னை நம்பி எந்த ஹீரோ கால் சீட் கொடுப்பார் என்று கேட்டேன்.

rathnam

உடனே அஜித் நான் தருகிறேன் என கூறி தொடர்ந்து வீரம், என்னை அறிந்தால், வேதாளம் போன்ற மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்தார். அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை தவறவும் மாட்டார் என ஏ எம் ரத்தினத்தின் மகன் அந்த விழா மேடையில் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News