சின்மயிக்கு முதல் முறையாக ஆதரவு திரட்டும் ரசிகர்கள்… ஏ.ஆர். மற்றும் கமல்ஹாசனுக்கு திடீர் கோரிக்கை

By :  AKHILAN
Published On 2025-05-28 16:17 IST   |   Updated On 2025-05-28 16:17:00 IST

Chinmayi: தமிழ் சினிமாவில் சின்மயிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல்ஹாசனுக்கு கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2018ல், மி டூ இயக்கம் இந்தியாவில் பெரிய அளவில் கிளம்பிய போது, சின்மயி தன்னுடைய அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்தார். குறிப்பாக, தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய பிரபலங்கள் மீது அவர் தொடர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் தன்னிடம் பாடலாசிரியர் வைரமுத்து தவறாக நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதுக்குப் பிறகு தான் பிரச்சனைகள் ஆரம்பமானது. அதற்கு பிறகு, சின்மயிக்கு தென்னிந்திய சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் டப்பிங் யூனியனில் இருந்தும் ஆண்டு சந்தா வெறும் 90 ரூபாய் கட்டவில்லை என்றும் அவரை நீக்கி வாய்ப்பு வழங்காமல் முடக்கினர். இதனால் பல தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கும் நிலை ஏற்பட்டது. 

 

அதிகாரபூர்வமான பேன் எதுவும் இல்லை என்றாலும், தமிழ் சினிமாவில் இருந்து அவரது வாய்ப்புகள் தானாகவே குறைந்து போனது. தற்போது தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் அதிகமாக பணியாற்றி வருகிறார். இந்த சமயத்தில் கூட இவருக்கு தமிழ் ரசிகர்கள் பெரிய ஆதரவு தரவில்லை.

இந்நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் முத்த மழை பாடலின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்பில் மட்டுமே சின்மயி பாடி இருந்தார். பேன் இருப்பதால் அவருக்கு தமிழ் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் ஆடியோ வெளியிட்டு விழாவில் தமிழில் சின்மயி பாடியது வைரலாக பரவியது.

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் இந்த பாட்டை சின்மயி பாடியது தான் சரியாக இருக்கும். ஏன் அவருக்கு இந்த பேன்? சீக்கிரம் நீக்குங்கள் கோலிவுட்டிற்கு அவர் தேவை எனவும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சின்மயி பாடலும் தொடர்ந்து வைரலாகி இருக்கிறது.

Tags:    

Similar News