100 கோடிக்கும் மேல் நஷ்டம் கொடுத்த படங்கள்!.. தயாரிப்பாளரை காலி செய்த கேம் சேஞ்சர்..

By :  Murugan
Update:2025-01-27 23:03 IST
game changer
  • whatsapp icon

குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து நல்ல வசூலை பெற்றால் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கிடைக்கும். அதுவே, பெரிய நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டில் படமெடுத்து நஷ்டமடைந்தால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்துவிடும். ஏனெனில், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுக்கு சம்பளமே 100 கோடிக்கும் மேல் கொடுக்கப்படுகிறது.

அதிலும், விஜய்க்கெல்லாம் 200 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள். அஜித்துக்கு 160 கோடி வரை கொடுக்கிறார்கள். அடுத்து அவருக்கு 200 கோடியை கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள். கல்கி படத்தின் இரண்டு பாகத்திலும் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இந்த சம்பளமெல்லாம் இந்த 2 வருடங்களில்தான்.


குறிப்பாக இப்போது எல்லா படங்களுமே பேன் இண்டியா படங்களாக உருவாகி வருகிறது. இதை துவங்கி வைத்தவர் ராஜமவுலிதான். அவரின் பாகுபலி, பாகுபலி 2 இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன்பின் பிரபாஸின் எல்லா படங்களுமே பேன் இண்டியா படமாக வெளியாகி வருகிறது.

மேலும், ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப், கேஜிஎப்2, புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்கள் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை பெற்றது. அதேநேரம், கடந்த சில வருடங்களில் சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையும் கொடுத்திருக்கிறது. அப்படி 100 கோடிக்கும் மேல் நஷ்டத்தை கொடுத்த சில படங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.


பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் 126 கோடி, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படம் 110 கோடி, பிரபாஸின் ஆதிபுருஷ் படம் 120 கோடியும், சாஹோ 80 கோடியும் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் 150 கோடிக்கும் மேல் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் 1800 கோடி வசூல் செய்து 2024ம் வருடத்திலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை பெற்றிருக்கிறது.

Tags:    

Similar News