படத்துக்கே அவ்ளோ வாங்கல.. ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா? ஓவரா போகும் நயன்
நயன்தாரா:
தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் நயன்தாரா தற்போது குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். தனது கவனத்தை தான் நடத்தின் வரும் பிசினஸில்தான் செலுத்தி வருகிறார். 9ஸ்கின் என்ற பெயரில் ஒரு பிசினஸை நடத்தி வருகிறார்.
அதோடு பல விளம்பரங்களுக்கு அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா ஆரம்பத்தில் கிளாமர் உடையில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஐயா மற்றும் சந்திரமுகி ஆகிய படங்களில் தான் குடும்பபாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அதன் பிறகு விஜய், அஜித், சிம்பு , சூர்யா , தனுஷ்என இவர்களுக்கு ஜோடியாக அதுவும் கிளாமராக படங்களில் நடித்து வந்தார்.
திருமணத்திற்கு பின் பொறுப்பு:
இதன் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக அஜித்துடன் தொடர்ந்து படங்களில் நடித்து ஒரு வெற்றி ஜோடியாகவும் திகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நயன் திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. நானும் ரவுடிதான் , மூக்குத்தி அம்மன் போன்ற படங்களுக்கு பிறகு நயன் நடிப்பில் வெளியான எந்தப் படங்களுமே சரிவர போகவில்லை. அதனால் மார்கெட் இழந்த நடிகை நயன் என்ற விமர்சனத்திற்கு ஆளானார். எப்படியாவது லைம் லைட்டில் நாம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கிறார் நயன்.
ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா?
அந்த வகையிலாவது நயன் பற்றிய செய்திகள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமந்தா, தமன்னா போல நயனும் இப்போது ஒரே ஒரு பாடலுக்கு ஆட விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. பிரபாஸ் நடிக்கும் ராஜா சாப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நயன் நடனமாடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாடலுக்கு நடனம் ஆட நயன் 12 கோடி கேட்டதாக சொல்லப்படுகிறது. அவர் தான் நடிக்கும் ஒரு படத்திற்கே 10 கோடிதான் சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆட 12 கோடியா என ரசிகர்களும் வாயை பொழக்குகிறார்கள். இந்த சுவாரஸ்ய செய்தியை சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.
Also Read: அஜித்-திரிஷா காம்போல இத்தன படம் ரிலீஸ் ஆயிருக்கா?.. இதுல அந்த 3 படத்துல இருக்க ஒற்றுமை!..