சிலம்பரசன் நடித்து வரும் புதிய படம் தான் ‘அரசன்’. இதை ‘பொல்லாதவன், ஆடுகளம், அசுரன்’ போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
தனுஷின் ஆஸ்தான இயக்குநர் முதல்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் ஒரு ஹைப் இருக்கிறது. அதை ஆல்ரெடி அதிகப்படுத்தும் விதமாக தான் இதன் முதல் ப்ரோமோவும் இருந்தது.
இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தான் அதிக பட்ஜெட்டில் தயாரித்து கொண்டிருக்கிறார். இதுக்கு நம்ம அனிருத் ரவிச்சந்தர் தான் இசை.
தற்போது, அனிருத் இதன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.







