சில படங்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்று விடும். இந்த லிஸ்ட்டில் சேர்ந்த படம் தான் சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சுபாஷ்.கே.ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் விருந்தாக இந்த படம் அமைந்தது. அர்ஜுன் உடன் சேர்ந்து அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தார்கள்.
இதுக்கு ரவி பஸ்ரூர் தான் இசை. ஆல்ரெடி இதன் Original Score Volume 1 வெளியாகி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது. தற்போது, Original Score Volume 2-வை ரிலீஸ் செய்துள்ளனர்.







