தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியுள்ள அவர், தற்போது தனது மகளின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது மகள் அரின் பூக்கோலம் போடும் புகைப்படங்களை அசின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையில் அரின் மலர்களை வைத்து பூக்கோலமிடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும், தந்தை ராகுல் சர்மாவுடன் அரின் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அசினின் குட்டி ஜெராக்ஸ்”, “லிட்டில் அசின்” என அன்புடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கஜினி, சிவகாசி, வரலாறு, தசாவதாரம், காவலன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் அசின்.அவரது கடைசி படமான ‘ஆல் இஸ் வெல்’ 2015-ல் வெளியானது.

2016-ல் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்ட அசினுக்கு 2017-ல் அரின் பிறந்தார். திருமணத்துக்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகிய அசின், தனது குடும்ப புகைப்படங்களை மட்டும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள அரினின் ஓணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.







