விஜய் தொலைக்காட்சியின் தற்போதைய வைரல் தொடராக இருக்கும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த ஆச்சரிய தகவல்கள்.
ரேவதி விவரமாக தன்னுடைய மாமியார் செல்லிலிருந்து மெசேஜ் போட்டு பாக்யராஜ் மற்றும் மலரை உஷார் செய்து விடுகிறார். இதை பார்த்த மலர் பதறிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியராஜ் பதறாமல் தான் பார்த்துக் கொள்வதாக அவரை சமாதானம் செய்கிறார்.
வீட்டிற்கு வந்தவுடன் அவர் அப்பா எங்க போன என கேள்வி எழுப்ப யோசிக்காமல் தான் மலருடன் பெண் பார்க்க சென்றதாக சொல்லிவிடுகிறார். பின்னர் அவர்கள் மூவரும் தனியாக போவது சரியாக இருக்காது என்பதால் துணைக்கு போனதாகவும் சமாளித்து விடுகிறார்.
பொய் சொல்லி மாட்டிக்காமல் உண்மையை சொன்னதால் பாக்கியராஜிடம் எதுத்து பேசாமல் அவர் அப்பா விட்டு விடுகிறார். மலரும் ஆசுவாச பட்டு பின்னர் ரூமுக்குள் சென்று பாக்கியராஜை ஆக ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தனக்காக முதல்முறையாக பாக்கியராஜ் துணை நின்றதாக அவரை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார் மலர். பின்னர் மலர் மற்றும் மதி இருவரும் தங்கராஜ் செய்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பின்னர் மலர், மதி, பாக்கியராஜ் நடந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்க சரியாக அங்கு சுரேஷ் வர பேச்சையும் நிறுத்தி விடுகின்றனர். நா வந்தோன பேச்ச நிறுத்திட்டீங்க என சுரேஷ் கலாய்க்க உங்க மாமா பத்திதான் பேசுனோம்.
உனக்கு தெரிஞ்சா நீ போட்டு கொடுப்பா எனச் சொல்லிவிட்டு மதியுடன் சென்று விடுகிறார். சுரேஷ் என்ன பேசுனீங்க எனக் கேட்க இன்று நடந்த விஷயம் தான் என்கிறார். பின்னர் நைசாக சுரேஷிடம் மூவரின் வாட்ஸ் அப் குரூப் குறித்து போட்டுவிடுகிறார். மலரே என்ன கலாய்க்கிறா? மதி உன்ன என்ன செய்றாளோ என கொளுத்திவிட சுரேஷுக்கு அடுத்த ஆப்பு ரெடிதான்!







