Connect with us

Biggboss Tamil 7

ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?

Biggboss7: கடந்த சீசன் பிக் பாஸ் 7 முடிந்துவிட்டாலும் அதில் நடந்த பஞ்சாயத்துகள் மட்டும் இன்னும் ஓயவில்லை. தற்போது மீண்டும் இரண்டு குழுவும் அடித்துக் கொள்ள தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஆண்டு வெற்றிகரமாக தொடங்கியது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு அந்த சீசனில் பெரிய அளவிலான சுவாரஸ்யம் முதலில் ஏற்படவில்லை. போட்டிகளே இல்லாமல் பேச மட்டுமே வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: என்னய்யா கடைசியில் இப்படி பண்ணிட்டீங்க… ஏமாந்த விஜய் ரசிகர்கள்… தளபதி 69 படத்தின் அப்டேட்..?

ஆனால் நாளாக நாளாக போட்டி வலுக்க தொடங்கியது. இருந்த போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். அதிலும் பிரதீப் ஆண்டனியை கட்டம் கட்டி வெளியேற்றிய மாயா மற்றும் பூர்ணிமாவை எதிர்த்து அர்ச்சனா மற்றும் தினேஷ் களமிறங்கினர். இதனால் ஆட்டம் சூடு பிடித்தது.

இந்நிலையில் மக்கள் எதிர்பார்ப்பது போலவே அர்ச்சனா வெற்றி பெற்ற மகுடம் சூடினார். தற்போது எட்டாவது சீசனும் தொடங்க இருக்கிறது. இதன் முதற்கட்ட புரோமோ சமீபத்தில் வெளியானது. அதை பகிர்ந்து மாயா கிருஷ்ணன் சிலவற்றை தன்னுடைய பதிவில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பெண்களை கோபப்பட விடுங்கள். அவர்களை உமன் கார்டை பயன்படுத்த அனுமதி இல்லை . ஆதாரம் கேட்காதீர்கள். பணம் மற்றும் புகழ் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். நல்ல நட்பை உள்ளே உருவாக்கிக் கொள்ளுங்கள். தைரியமாக செல்லுங்கள். உங்களுக்கு நீங்களே போதும்.

மாயாவின் ட்வீட்டைக் காண: https://x.com/maya_skrishnan/status/1833905094775247175

பி ஆர் எல்லாம் தேவைப்படாது. அப்படி நீங்கள் ஒருவரை நியமித்தாலும் பகை மற்றும் கோபத்தை ஏற்படுத்தக் கூடாது என சொல்லி செல்லுங்கள். பிக் பாஸ் அழகிய விளையாட்டு. எப்பொழுதும் உண்மைக்கே குரல் கொடுங்கள் உள்ளிட்ட அவற்றை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை தொடர்ந்து அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டீமிற்கு எதிராக இருந்த தினேஷ் கோபாலசாமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் உமன் அல்லது மென் கார்டை பயன்படுத்துங்கள். ஆனால் அதையெல்லாம் விட ஹியூமன் கார்ட் என்பதை மறந்து விடாதீர்கள் என மாயாவை கலாய்த்து இருந்தார்.

Dinesh

தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், உங்க சீசன் முடிஞ்சு அடுத்த சீசனை தொடங்க போகுது இன்னும் உங்க பஞ்சாயத்து ஓயலையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அக்டோபர் ஆறாம் தேதி பிக் பாஸ் சீசன் 8 ஆரம்ப நிகழ்வுடன் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்த் சீன் சொதப்பல்! அதற்கான காரணத்தை கூறிய கோட் ஒளிப்பதிவாளர்

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top