மலையாளத்தில் மரணமாஸ் ஹிட்!.. மமிதா பைஜுவின் அந்த படம் தமிழில் எப்போ ரிலீஸ் தெரியுமா?..

X
மலையாளத்தில் மரணமாஸ் ஹிட்!.. மமிதா பைஜுவின் அந்த படம் தமிழில் எப்போ ரிலீஸ் தெரியுமா?..

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது தமிழிலும் வெளியாக தயாராகி வருகிறது.

பிரேமலு படத்தை இயக்கிய கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வரும் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே நாளில் தெலுங்கு டப்பிங்கிலும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த அவரது இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கிறிஷ் ஏ.டி. மற்றும் மமிதா பைஜு மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும்,மூன்று நாட்களில் உலகளவில் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பிரேமலு’ படத்திற்குப் பிறகு கிறிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியாகும் புதிய படம் என்பதால், தமிழிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.