Connect with us

விஜய் கட்சி மீது புகார் கொடுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்! என்ன சேதி தெரியுமா?

latest news

விஜய் கட்சி மீது புகார் கொடுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்! என்ன சேதி தெரியுமா?

Vijay: நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். இது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகி வருகிறது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி. இவர் அதற்கு முன் கலந்துக்கொண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பலரிடமும் பிரபலமாகி உள்ளே வந்தார். ஆனால் இங்கு நிலைமை தலைகீழானது. ஓவியாவுக்கு எதிராக அவர் சொன்ன ஒரு வார்த்தையால் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகினார். 

வெளியில் வந்து கூட ஜூலிக்கு பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனமே வந்தது. ஐந்து வருடத்துக்கு பின்னர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னரே அவர் மீதான அவதூறை மாற்றினார். தொடர்ந்து வெளியில் வந்து சில படங்கள் நடித்தார்.

பின்னர் அவருடைய நீண்ட கால காதலரை கரம் பிடித்து யூட்யூப் நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக ஜூலி தவெக தரப்புக்கு எதிராக வீடியோ போட்டு வைரலாகி வந்தார். அதை தொடர்ந்து அவர் மீது கிட்னி திருட்டு வழக்கு இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை பலரும் பகிர்ந்து வந்தனர். 

இந்நிலையில் தன் மீது தவறான தகவலை தவெக கழகத்தினர் செய்வதாக ஒரு நிர்வாகி உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்து இருக்கிறார். மேலும் இவர்கள் மீதான வழக்கை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

To Top