Bigg Boss Tamil 8
BiggBoss tamil: புதுசா பண்ணுற நினைப்போ?… அரைச்ச மாவை கிண்டும் விஷால், தர்ஷிகாவால் கடுப்பாகும் ரசிகர்கள்
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன்8 அதளபாதாளத்தில் இருக்கும் நிலையில் உள்ளிருக்கும் போட்டியாளர்களும் கண்டன்ட் என்ற பெயரில் மீண்டும் ரசிகர்களை கடுப்பாக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் இருந்து 6வது சீசன் வரை மிகப்பெரிய புகழை பெற்றது என்னவோ உண்மைதான். அதற்கு முக்கிய காரணம் பரபரப்பான பிஸிக்கல் டாஸ்க் வைத்து ரசிகர்களை சுவாரசியமாக நிகழ்ச்சியை பார்க்க வைத்தனர்.
இதையும் படிங்க: பாக்கியராஜ், பாண்டியராஜன் படங்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசம்… காணாமல் போக இதுவும் காரணமா?
அதில் தானாக சண்டை ஏற்பட அதற்கு வார இறுதியில் கமல்ஹாசன் கொடுக்கும் தக் லைஃப் வசனங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. ஆனால் கடந்த சீசன் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு போர் அடிக்க தொடங்கி இருக்கிறது.
எந்தவித டாஸ்க்கும் இல்லாமல் தேவையே இல்லாமல் கதை பேசி சுற்றிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களை ரசிகர்களும் எவ்வளவு நேரம் தான் உன்னிப்பாக பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய கண்டன்ட் இல்லை என முடிவெடுக்கும் போது அவர்கள் கையில் எடுக்கும் முதல் யுத்தி காதல் ட்ராமா தான்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய தொய்வை சந்தித்திருக்கும் நிலையில், தற்போது நிகழ்ச்சியில் இருக்கும் ரானவ் மற்றும் விஷால் செய்யும் சில விஷயங்கள் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிடிக்கவில்லை எனச் சொல்லும் பவித்ராவிடம் வலிய சென்று காதல் போல நடித்து வருகிறார் ரானவ்.
இதையும் படிங்க: ‘நானும் ரவுடிதான்’ மட்டுமில்ல.. ‘யாரடி மோகினி’ சமயத்திலும் தனுஷிடம் நயன் கேட்ட உதவி.. என்ன தெரியுமா?
அது மட்டுமில்லாமல் தற்போது தர்ஷிகா தன்னுடைய விளையாட்டு சரியாக இல்லை என கணித்ததோடு அதை தற்போது தப்பான பாதைக்கு மாற்றி இருக்கிறார். சீரியல் நடிகர் விஜே விஷாலின் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக ஜாக்குலினிடன் கூற அது நேற்று ஒளிபரப்பானது.
இந்நிலையில் தொடர்ந்து நேற்று இரவு விஜே விஷாலுடன் அவர் பேசிக் கொண்டிருந்த சில விஷயமும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரை சொல்லிவிட்டு ஜாக்குலின் தான் தனக்கும் விஷாலுக்கும் காதல் இருப்பதாக ஏற்றி விடுவதாகவும் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், விஷால் நீங்கள் கவினுமல்ல, தர்ஷிகா நீங்கள் லாஸ்லியாவும் அல்ல. விளையாட வந்த வேலையை பார்க்காமல் இந்த காதல் டிராமாவை நிறுத்திவிட்டால் ரசிகர்களும் நன்றாக இருக்கும் என பேசி வருகின்றனர்.