அஜித்தோடு மோதி வாங்குனது பத்தாதா?!.. பயம் இருக்கும்ல!.. ரஜினியை பங்கம் செய்யும் பிரபலம்

by சிவா |
அஜித்தோடு மோதி வாங்குனது பத்தாதா?!.. பயம் இருக்கும்ல!.. ரஜினியை பங்கம் செய்யும் பிரபலம்
X

Vettaiyan: சில சமயம் பெரிய நடிகர்களின் படங்கள் கூட அந்த நடிகரை விட சின்ன நடிகரின் படங்களோடு மோதி தோற்றுப் போகும். சமீபத்தில் கூட இந்தியன் 2 படம் வெளியானது. மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இது. ஆனால், படம் ஓடவில்லை. ஆனால், குறைவான பட்ஜெட்டில் சூரியின் நடிப்பில் வெளியான கருடன் படம் சூப்பராக ஓடியது.

எனவே, ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம். அந்த கதையை இயக்குனர் எப்படி சுவாரஸ்ய திரைக்கதையாக சொல்கிறார் என்பதுதான் முக்கியம். கருடன், மகாராஜா படங்களை பிடித்த ரசிகர்களுக்கு இந்தியன் 2 பிடிக்காமல் போனதில்தான் வெற்றி தோல்விக்கான ரகசியம் ஒளிந்திருக்கிறது.

இதையும் படிங்க: அய்யோ நானா? அந்த விஷயத்தை செய்ய தயங்கிய அனிருத்!.. கடைசியில் என்ன நடந்தது?

30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரே நாளில் பல நடிகர்களின் படங்கள் வெளியாகும். ரஜினி, கமல், மோகன், ராமராஜன், விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் தொடர்ந்து ஒரே நாளில் வெளியாகும். ஆனால், அப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு ஓடும் என்பதால் வசூலை அள்ளிவிடுவார்கள்.

ஆனால், இப்போது ஒரு படம் நன்றாக இல்லை என்றால் படம் வெளியாகி ஒரே வாரத்தில் தூக்கிவிட்டு வேறு படத்தை போட்டு விடுகிறார்கள். அதிகபட்சம் 2 வாரங்களில் தூக்கிவிடுவார்கள். அதனால்தான், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது 3 நாட்களிலேயே வசூலை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: ட்ரோல்லயே சிக்கமா இருந்தேன்!. இப்ப நான் படுற பாடு இருக்கே!… புலம்பும் எஸ்.ஜே.சூர்யா…

ஆனால், பெரிய நடிகர்களின் பல படங்கள் ஒரே நேரத்தில் ரெடியாகிவிட்டதால் எப்போது ரிலீஸ் செய்வதில் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜயின் கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடாமுயற்சியும், அமரனும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது.

vettaiyan

இந்நிலையில்தான் ரஜினியின் வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதை கிண்டலடித்திருக்கும் புளூசட்ட மாறன் விடாமுயற்சி, கோட் படங்களில் மோதாமல் சூர்யாவுடன் தெரிந்துதான் ரஜினி மோதுகிறார் என வடிவேல் மீம்ஸை வைத்து கிண்டலடித்திருக்கிறார்.

meems

அதாவது, பேட்ட படத்தோடு வெளியான விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது. எனவேதான், அஜித், விஜயோடு மோதால் சூர்யாவோடு ரஜினி மோதியிருக்கிறார் என்பதைத்தான் இப்படி கிண்டலடித்திருக்கிறார் புளூசட்ட மாறன்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க

Next Story