latest news

பர்ஸ்ட் ஆஃப் சுமார்தான் ஆனால் செகண்ட் ஆஃப் …யூத் படம் குறித்து புளு சட்டை மாறன் விமர்சனம்

பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கருப்பையா சி.ராம் மற்றும் சுலோச்சனா குமார் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் யூத். அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆன கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் னிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகியோரும், முக்கியக் கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி மற்றும் மலையாள முன்னணி நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் முதல் நாள் வசூல் கிட்டதட்ட […]

பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கருப்பையா சி.ராம் மற்றும் சுலோச்சனா குமார் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் யூத். அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆன கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் னிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகியோரும், முக்கியக் கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி மற்றும் மலையாள முன்னணி நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் முதல் நாள் வசூல் கிட்டதட்ட ரூ.3 கோடிக்கு மேல் வசூல் ஆனது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் நல்ல வசூலை குவிக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

இந்த நிலையில் யூத் படம் குறித்து புளு சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் முதல் பகுதி சுமாராகத்தான் உள்ளது. குறிப்பாக கதையின் நிறைய இடங்களில் இவர்களுக்கு ஏற்றார் வளைச்சு வளைச்சு எடுத்திருக்கிறர்கள். இடைவேளை சீன் இவர்களுக்கு ஏற்றார்போல கம்போசிங் செய்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதி நன்றாகவே உள்ளது. லவ், படிப்பு மேமிலி என கலந்து கொடுத்திருப்பதால் இறுதி வரை நன்றாகவே உள்ளது. முதல் படத்திலேயே கென் கருணாஸ் ஒரு ஹீரோவாகவும் இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார். சிம்பு மாதிரி விரல் வித்தையெல்லாம் காட்டி குரங்கு சேட்டை எல்லாம் செய்கிறார். இந்த படம் ஓகே ரகம்தான். தாராளமாக மேமிலியுடன் பார்க்கலாம் என்று தனது விமர்சனத்தில் புளுசட்டை மாறன் கூறியுள்ளார்.

Author
Sai Vikas ✓

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]