பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி. இந்த திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இடையில் நிறைய படங்களில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி மகாராஜா படத்திற்கு பின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் இது.
இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக சூர்யாவை வைத்து இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியான நிலையில் மூன்று வருடம் கழித்து அவர் இயக்கிய திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தில் யோகிபாபு, சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்ற பொட்டல முட்டாயே பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இதுவே இந்த படத்திற்கு புரமோஷனாக அமைந்து படத்திற்கு முதல் நாளே நல்ல ஓப்பனிங் கிடைத்தது, இதைத் தொடர்ந்து படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான 25ம் தேதி 4.5 கோடி வசூலானது. மேலும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் வசூல் அதிகரித்து 2ம் நாளான நேற்று இப்படம் 6.75 கோடி வசூல் செய்துள்ளது. மொத்ததில் படம் வெளியான 2 நாட்களில் 11.25 கோடி வசூல் செய்துள்ளது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com


