Connect with us

இது என்னோட நேரம்!.. இனிமே பின்வாங்க மாட்டேன்!.. அஜித் இப்படியெல்லாம் பேசுவாரா?!…

latest news

இது என்னோட நேரம்!.. இனிமே பின்வாங்க மாட்டேன்!.. அஜித் இப்படியெல்லாம் பேசுவாரா?!…

Ajithkumar: சினிமாவில் அஜித் வித்தியாசமானவர் என்றே சொல்லலாம். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள மாட்டார். சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என வற்புறுத்தினால் ‘என்னை மிரட்டுகிறார்கள் என முதலமைச்சரை வைத்துக்கொண்டே மேடையில் பேசுவார்.

அஜித் கடைசியாக கலந்துகொண்டது அவர் நடிப்பில் வெளியான அசல் பட புரமோஷன் நிகழ்ச்சியில்தான். அது நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ்களிலும் கலந்துகொள்கிறார். ஏற்கனவே துபாயில் இவரின் டீம் 3வது பரிசை வென்றது. இப்போது ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் ரேஸ்களில் அஜித் கலந்துகொண்டு வருகிறார்.

பைக்கை எடுத்துக்கொண்டு வெகு தூரம் பயணிப்பது, துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் ஹெலிகாப்டர்களை இயக்குவது என சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விஷயங்கள் மீது ஆர்வமுண்டு. எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை செய்து வருகிறார்.

குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு ரேஸுக்கு போனவர் இந்த மாதம் அக்டோபர் வரை ரேஸில் கலந்துகொள்கிறார். அதன்பின் 5 மாதங்கள் சினிமாவில் நடித்துவிட்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் மீண்டும் ரேஸுக்கு போகவிருக்கிறார். இனிமேல் சினிமா, கார் ரேஸ் என இரண்டிலுமே அவர் தொடர்ந்து பயணிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில், கார் ரேஸின் போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அஜித் ‘என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்களை வைத்து என்னை நான் மதிப்பிட்டு கொள்ள மாட்டேன். நான் ஒரு வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்தபோது என் தமிழ் உச்சரிப்பு நன்றாக இல்லை என்றர்கள். எனக்கு தமிழ் சரியாக பேசவரவில்லை. இது தொடர்பாக வந்த விமர்சனங்களுக்கு பிரகு என் பலவீனங்களை சரி செய்ய முயற்சி எடுத்து அதை சரி செய்தேன்.

சினிமாவை போல கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும். ஆனால், பயிற்சி எடுப்பேன். விரைவாக கற்றுக்கொள்வேன். எனது நேரம் வந்துவிட்டது. இது என்னுடைய நேரம். என்னவானாலும் பின் வாங்க மாட்டேன்’ என பேட்டி கொடுத்திருக்கிறார் அஜித்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top