Connect with us

ஆசையா கேட்டா ஆப்பு வச்சிட்டாரே!.. ராஜமவுலி படத்தில் நடிக்க மறுத்த சியான் விக்ரம்!..

latest news

ஆசையா கேட்டா ஆப்பு வச்சிட்டாரே!.. ராஜமவுலி படத்தில் நடிக்க மறுத்த சியான் விக்ரம்!..

Chiyan Vikram: இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. துவக்கத்தில் மசாலா தெலுங்கு படங்களை இயக்கினாலும் இவர் இயக்கிய பாகுபலி படம் இவரை பேன் இண்டியா அளவில் பிரபலமடைய வைத்தது. பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

முதல் பாகத்தை விட பாகுபலி 2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பின் ராஜமவுலி எல்லோராலும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார்.

அடுத்து அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் பல நூறு கோடிகளை வசூல் செய்தது. இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ஆஸ்கர் விருதையும் பெற்றது. முதன் முதலில் ஒரு தெலுங்கு சினிமாவுக்கு ஆஸ்கர் விருது வாங்கி கொடுத்தது ராஜமவுலிதான்.

எனவே, இவரின் இயக்கத்தில் நடிக்க தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள அனைத்து பெரிய நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள். ரஜினியை வைத்து ஒரு படம் பேசப்பட்டது. ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை. இப்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை துவங்கவிருக்கிறார் ராஜமவுலி.

இந்த படத்தின் ஃப்ரி புரடெக்‌ஷன் பணிகளே பல மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க சியான் விக்ரமை கேட்டிருக்கிறார். 8 மாதங்களுக்கு முன்பே இருவரும் சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க விக்ரமும் ஆர்வமாக இருந்தாலும் அது வில்லன் வேடம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே, இப்போது மலையாள நடிகர் பிருத்திவிராஜை ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமவுலி. ஏற்கனவே பிரபாஸ் நடித்த சலார் எனும் பேன் இண்டியா படத்தில் பிருத்திவிராஜ் நடித்திருந்தார். எனவே, அவரை நடிக்க வைக்க ராஜமவுலி முடிவு செய்துவிட்டார். ராஜமவுலி ஒரு படத்தை எடுத்து முடிக்க 3 வருடங்கள் எடுத்துக்கொள்வார். அதோடு, நடிகர்களிடம் அதிக நாட்கள் கால்ஷீட்டும் கேட்பார். அதனால் விக்ரம் நடிக்க மறுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top