Connect with us

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் ஆப் பார்த்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் ரியாக்‌ஷன் இதுதான்!..

latest news

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் ஆப் பார்த்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் ரியாக்‌ஷன் இதுதான்!..

Coolie: இந்திய சினிமா உலகினரால் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர்தான் ரஜினி., 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இன்னமும் அவரிடம் உற்சாகம் குறையவில்லை. 72 வயது ஆகியும் முதல் படத்தில் நடிப்பது போலவே இப்போதும் ஆர்வமாக நடித்து வருகிறார். ரஜினியை இயக்குனர்களின் நடிகர் என தாராளமாக சொல்லலாம்.

கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு விட்டால் ஷுட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் சொல்வதை அப்படியே செய்வது ரஜினியின் வழக்கம். தனக்கு தோன்றும் ஐடியாவை சொல்வார். அதை ஏற்பது இயக்குனரின் விருப்பம். எதையும் கட்டாயப்படுத்த மாட்டார். இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை விட பல மடங்கு கொடுப்பார்.

லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் லோகேஷின் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரின் இயக்கத்தில் ரஜினி நடித்திருப்பது மேலும் ஹைப்பை ஏற்றியிருக்கிறது.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், ஹிந்தி நடிகர் அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா என பலரும் நடித்திருக்கிறார்கள். கூலி பேன் இண்டியா படமாக உருவாகியிருப்பதால் இப்படி ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதோடு, நடிகர் சத்யராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாதியை ரஜினி பார்த்துவிட்டாராம். படம் பட்டாஸாக வந்திருப்பதால் ரஜினிக்கு மிகவும் பிடித்து லோகேஷை அழைத்து பாராட்டியிருக்கிறார். ரஜினி இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விரைவில் துவங்கவுள்ளது.

கூலி படம் வருகிற ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் வருகிற 21ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top