Connect with us

Cinema News

தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

Brother: நடிகர் ஜெயம் ரவி கைவசம் எக்கச்சக்க திரைப்படங்கள் கொட்டிக் கிடக்கும் நிலையில் அவரின் முக்கிய திரைப்படமான பிரதர் படத்தின் முக்கிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக கதை சொல்லும் இயக்குனர்களுக்கு மத்தியில் காமெடியை கையில் வைத்து பக்கா கமர்சியல் படமாக கொடுத்து ஹிட் அடிக்கும் முக்கிய இயக்குனர் பட்டியலில் இருப்பவர் ராஜேஷ். இவரின் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 

இதையும் படிங்க: குடும்பத்தில் ஓவராக தலையிடும் மாமியார்… இப்படிலாம் செய்யலாமா? ஜெயம்ரவி விவாகரத்து பின்னணி

தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும்  பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இப்படத்தில் பிரியங்கா மோகன், நட்ராஜ், பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மிக்காமிஷி கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இப்பாடலை பால் டப்பா என்னும் பாடகர் பாடியது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ஜீவாவுக்கு நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை!.. கொளுத்திப்போட்ட சுசித்ரா!…

இந்நிலையில் படக்குழு இப்படத்தின் ஆடியோ  ரிலீஸ் மற்றும் ட்ரெய்லரை செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக டீசர் வீடியோ ஒன்றும் படக்குழுவால் வெளியிடப்பட்டிருக்கிறது.

நேற்று ஜெயம் ரவியால் தன்னுடைய திருமண விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று அவர் பிறந்த நாளை ஒட்டி தொடர்ச்சியாக அவரின் படங்கள் குறித்த தொடர் அப்டேட்களால் ரசிகர்களை திணறடித்து வருகிறது படக்குழுக்கள்.

ட்வீட்டைக் காண: https://x.com/Screensceneoffl/status/1833380146444898689

google news
Continue Reading

More in Cinema News

To Top