Connect with us

ஒன்ன தவிர எல்லாமே விஜய் டிவி பிராடக்ட் தான்… அடுத்தக்கட்ட போட்டியாளர்கள் இவர்கள்தான்!..

latest news

ஒன்ன தவிர எல்லாமே விஜய் டிவி பிராடக்ட் தான்… அடுத்தக்கட்ட போட்டியாளர்கள் இவர்கள்தான்!..

விஜய் டிவியில் அடுத்தக்கட்ட போட்டியாளர்களின் லிஸ்ட்

BiggbossTamil8: இன்று முதல் பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் வரிசையாக உள்ளே வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட எட்டு போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகிவிட்டது.

ரஞ்சித்: நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். சமீபகாலங்களாக சர்ச்சையில் சிக்கி கொண்டிருக்கிறார். விஜய்டிவியில் வரிசையாக சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமி கேரக்டரில் நடித்துள்ளார். இவருடைய கவுண்டம்பாளையம் திரைப்படம் ட்ரோல் செய்யப்பட்டது.

பவித்ரா ஜனனி: சின்னத்திரை சீரியல் நடிகை பவித்ரா. சின்ன ரோலில் நடித்து வந்தவர். ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து ஹிட் கொடுத்தார். பலநாட்களாக சீரியல் இல்லாமல் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

சவுந்தர்யா நஞ்சுண்டன்: மாடல் அழகியான சவுந்தர்யா சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவருடைய பேட்டி ஒன்று வைரலானது. அதில் தனக்கு பிக் பாஸ் சீசன் 7ல் மாயாவை தான் பிடிக்கும் என சொல்லி இருப்பார். அதுவே ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டது.

அருண் பிரசாத்: விஜய் டிவியின் சின்னத்திரை சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது பாரதி கண்ணம்மா. ட்ரோல் மெட்டீரியலாக மாறினாலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கடந்த சீசன் அர்ச்சனா ரவீந்தரின் காதலர் என கிசுகிசுக்கப்படும் அருண் பிரசாத்.

தர்ஷிகா: விஜய் டிவியின் இன்னொரு பிராடக்ட். பொன்னி சீரியலின் வில்லி உள்ளிட்ட பிரபல தொடரில் நடித்து இருக்கிறார்.

விஜே விஷால்: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்தவர். குக் வித் கோமாளி நான்காவது சீசனில் கலந்து கொண்டிருந்தார்.

அன்ஷிதா: செல்லம்மா சீரியலின் நாயகி. சின்னத்திரை நடிகை திவ்யா வாழ்க்கையில் விளையாடியதாக விமர்சிக்கப்ப்பட்டார். சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளியில் கோமாளியாக எண்ட்ரியாகி இருந்தார்.

அர்னவ்: செல்லம்மா சீரியல் உள்பட சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். நடிகை திவ்யாவின் முன்னாள் கணவர். அன்ஷிதாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் என்பதால் ரசிகர்களிடம் நெகட்டிவ் இமேஜுடன் உள்ளே செல்கிறார்.

விஜே முத்துகுமரன்: யூட்யூப்பில் தொகுப்பாளராக ஹிட்டடித்தவர். வைரலாக நிறைய பேட்டிகளை கொடுத்தவர் தற்போது பிக்பாஸிற்குள் நுழைந்து இருக்கிறார்.

ஜாக்குலின்: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர். சில வருடங்களாக சீரியலில் ஆர்வம் காட்டி வந்தார். அடுத்து சில ஆண்டுகள் பிரேக்கில் இருந்தவர் தற்போது பிக்பாஸிற்குள் வந்து இருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top