---Advertisement---

நடிச்சது ஒரு சீன்.. அதுவும் போச்சா?!.. ஜனநாயகனில் வசனங்கள் மியூட்!..

Published on: March 20, 2026
jananayagan
---Advertisement---

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்திருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், படம் ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன்பு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க முடியாது, ஏனெனில் சில அதிகாரிகள் சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். எனவே படம் மறு தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்பின் ஒரு மாத காலம் வழக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்ற மாறி மாறி சென்றும், தயாரிப்பாளருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ம் தேதி படத்தின் தயாரிப்பாளர் தணிக்கை வாரியத்திற்கு எதிரான வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றார். மேலும் மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்.

அதேநேரம் படம் உடனடியாக மறுதனிக்கை செய்யப்படவில்லை. 50 நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில்தான் தணிக்கை வாரிய அதிகாரிகள் மும்பையில் இந்த படத்தை பார்த்தார்கள். படத்தில் தேர்தல் தொடர்பான சில காட்சிகள் இருப்பதால் இந்த படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்க வேண்டும் என தனிகை வாரியம் பரிந்துரை செய்திருக்கிறது..

இந்நிலையில்தான், இந்த படத்தில் வரும் சில அரசியல் வசனங்கள் மியூட் செய்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. விஜயின் குட் புக்கில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகிய மூவரும் இந்த படத்தில் ஒரு காட்சியில் பத்திரிக்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்டு விஜய் பதில் சொல்வது போல காட்சியை ஹெச்.வினோத் எடுத்திருக்கிறார். அனேகமாக அந்த காட்சியில் விஜய் சொல்லும் பதிலைத்தான் தணிக்கை வாரியம் மியூட் செய்திருக்கும் என கணிக்கப்படுகிறது.