கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனியின் வயது தெரியுமா?…

Published on: March 18, 2025
---Advertisement---

Keerthi suresh: நேற்று கோவாவில் கோலாகலமாக கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விரைவில் திருமண வரவேற்பு நடைபெறும் என்றும் அதற்கு அனைவரையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானாலும் கூட அவருக்கு வெற்றியை அளித்தது ரஜினி முருகன்தான். இதனால் சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சீமராஜா என மேலும் 2 படங்களில் நடித்தார். தொடர்ந்து தொடரி, சண்டக்கோழி 2, பைரவா, சர்கார், மகாநதி, சாமி2, அண்ணாத்த, சைரன், மாமன்னன், ரகு தாத்தா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இவரின் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் ஆண்டனியின் வயது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி அவருக்கு 34 வயது ஆகிறது. கீர்த்தி சுரேஷின் வயது 32. இருவருக்கும் நடுவில் 2 வயது தான் வித்தியாசமாம். கீர்த்தி ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டனி கல்லூரி மாணவராக அவருக்கு புரொபோஸ் செய்துள்ளார்.

இடையில் நடிக்க வந்து விட்டதால் காதல், காதலர் குறித்த ரகசியங்களை கட்டிக் காப்பாத்தி வந்த கீர்த்தி தற்போது வெளிப்படையாக அறிவித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார். இது தெரியாமல் நிறைய பேர் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்றும், வயது 45க்கு மேல் எனவும் வதந்தி பரப்பி வருகின்றனர். எது எப்படியோ பிரபலமாக இருந்தாலும், அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் ஆராய்ச்சி செய்வது நல்லதல்ல என்பதை சில ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment