Connect with us

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா? அப்போ முழுக்கு போட்டு போகல.. நண்பரே சொல்லிட்டாரே

latest news

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா? அப்போ முழுக்கு போட்டு போகல.. நண்பரே சொல்லிட்டாரே

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வளர்ச்சியை அடைந்தார் விஜய். அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும் போது வராத விமர்சனங்கள் இல்லை. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். அவரை உருவ கேலி செய்து மூலையில் உட்கார வைத்தனர். அவரை பற்றி பல வகைகளில் பத்திரிக்கைகளில் செய்திகள் எழுதினார்கள் . அதை தட்டி கேட்டு சண்டையும் போட்டிருக்கிறார் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.

ஆனால் இன்று தமிழகத்தை ஆளும் வருங்கால தலைவராக மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தமிழ் நாட்டுக்கு கண்டிப்பாக ஒரு மாற்று அரசியல் தேவை என்பதை நன்கு புரிந்து கொண்ட விஜய் தன்னுடைய 300 கோடி சம்பளத்தையும் உதறி தள்ளிவிட்டு மக்களுக்காக அரசியல் பணி செய்ய வந்திருக்கிறார். இவர் எப்போது அரசியலில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போவே அவருடைய மகன் ஜேசன் சஞ்சயும் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார்.

அதனால் விஜய் ரசிகர்கள் ஜேசனும் ஹீரோவாகத்தான் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக களமிறங்கினார். இதை பற்றி விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் கூறும் போது ஜேசன் என்னவாக ஆக வேண்டும் என்பதை ஜேசனே முடிவு செய்தது. அதுக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது. சப்போர்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என விஜய் சொன்னாராம்.

எப்படி விஜய் நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டு அவர் அப்பாவிடம் சொன்னாரோ அதை போல் ஜேசனும் நல்ல டெக்னீசியனாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான்.அவருக்கு படங்களில் நடிக்க நிறைய ஆஃபர்கள் வந்தது. ஆனால் நடிப்பதற்கு ஜேசனுக்கு ஆசையே இல்லை. டெக்னீசியனாக வேண்டும் என்ற ஆசையில் கனடா சென்று அங்கு படித்து எட்டிட்டிங் எல்லாம் கற்றுக் கொண்டார்.

கூடவே சினிமாட்டோகிராஃபியும் படித்தாராம். அதுமட்டுமில்லாமல் தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என ஜேசன் வெளிக்காட்டவே மாட்டான். அப்படித்தான் ஒரு சமயம் சத்யம் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் போது ஜேசனை நிறுத்தி டிக்கெட் காட்ட சொல்லியிருக்கிறார்கள். இவர் விஜயின் மகன் என தெரியாதாம். அப்போ ஜேசனுடன் வந்தவர் இவர் யார் தெரியுமா? என கேட்டிருக்கிறார்.

srinath

srinath

உடனே ஜேசன் ‘டிக்கெட் காட்ட சொன்னால் காட்டுங்கள்’ என மிகவும் பணிவன்புடன் சொன்னாராம். அப்பா மாதிரியே மகன். அதுமட்டுமில்லாமல் விஜய் திரும்பவும் நடிக்க வருகிறேன் என்று சொன்னால் ஜேசன் இயக்கத்தில் நடிக்க பெரிய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஸ்ரீநாத் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top