சச்சின் ரீ ரிலீஸ்!.. இதுல விஜய்யை விட இவருக்குத்தான் லாபம்.. கில்லிய பீட் பண்ணுமா?..

Actor Vijay: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும். இவரை வைத்து படம் இயக்குவதற்கு தயாரிப்பாளர் தொடங்கி இயக்குனர்கள் வரை நீ நான் என்று போட்டி போட்டுக் கொள்வார்கள். இப்படி சினிமாவில் டாப் இடத்தில் இருந்த நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருக்கின்றார்.
ஜனநாயகன் திரைப்படம்: அரசியலில் கால் பதித்திருக்கும் நடிகர் விஜய் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69 ஆவது படமான ஜனநாயகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் படத்தின் சூட்டிங், மற்றொரு பக்கம் கட்சி வேலை என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, மமீதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இந்த வருடம் நோ ரிலீஸ்: கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கிய ஜனநாயகன் திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் அதாவது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் திடீரென்று அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சச்சின் ரீ ரிலீஸ்: இந்த வருடம் நடிகர் விஜய் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்றாலும் அவரின் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை ரீ ரீலீஸ் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் சச்சின். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் இயக்கியிருந்தார்.
மேலும் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து வடிவேலு, சந்தானம், தாடி பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதத்துடன் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இதனால் இந்த திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்திருக்கின்றார். ஏற்கனவே விஜயின் கில்லி திரைப்படம் கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. படம் வெளியாகி 20 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்த நிலையில் சச்சின் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடிவேலுக்கு லாபம்: சச்சின் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதால் நடிகர் விஜயை காட்டிலும் வடிவேலுவுக்கு தான் அதிக அளவில் லாபம் இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தற்போது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கும் வடிவேலு தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும் முன்பு இருந்த அந்த புகழை பெற முடியவில்லை.
சச்சின் திரைப்படத்தில் வடிவேலு மற்றும் விஜயின் காமினேஷன் மிகச் சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருக்கும். காமெடியெல்லாம் வேற லெவலில் இருக்கும். தற்போது இப்படம் வெளியாவதால் நிச்சயம் வடிவேலு அவர்களின் மார்க்கெட் உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று கூறி வருகிறார்கள்.