எப்பவுமே சிவகார்த்திகேயனால் மத்தவங்க குடும்பத்துல சிக்கல்தான்!.. ஜோசியரு இப்படி சொல்லிட்டாரே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:26  )

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதற்குக் காரணம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் ராணுவ வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கின்றார். மேலும் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கின்றார்.

சமீப நாட்களாக படத்தின் பாடல், டிரைலர் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் இப்படம் தொடர்ந்து ப்ரீபுக்கிங் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இன்று அளவு மட்டும் பல திரையரங்குகளில் இப்படத்தை ரசிகர்கள் விறுவிறுப்பாக புக்கிங் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஜோசியர் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் முதல் எழுத்து அ என்று இருப்பதால் இந்த திரைப்படத்தில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதனால் படம் சற்று சறுக்கல்களை சந்திக்கலாம்.

இருப்பினும் அவரது ரசிகர்கள் அவரின் திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றி விடுவார்கள். அவருக்கு ராகு பலமாக இருப்பதால் திடீரென்று வாழ்க்கையில் உச்சத்தில் இருப்பார் திடீரென்று சறுக்கி விழுவார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனால் எப்போதும் அவரது குடும்பத்திற்குள் எந்த பிரச்சனையும் வராது.

அவரால் மற்றவர்களின் குடும்பத்தில் தான் சிக்கல் மற்றும் பிரச்சனை உருவாகும். அவரால் மற்றவர்களின் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து நடைபெற வாய்ப்பு இருக்கின்றது. சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயனால் இசையமைப்பாளர் இமான் வீட்டில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து பலருக்கும் தெரியும். அதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் இருக்கும் காலநிலை தான்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு வசூல் மன்னனாக வளம் வருவார். ரஜினி, விஜய் போல ஒரு கமர்சியல் ஹீரோவாக ஹிட்டு கொடுப்பார் நடிகர் விஜய். தற்போது சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தது போல எதிர்காலத்தில் சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர் பல விஷயங்களை சிவகார்த்திகேயன் குறித்து பேசி இருக்கின்றார்.

Next Story