Connect with us

வேறலெவலில் ரீ-ரிலீஸாகும் பாகுபலி!.. இதுவும் 1200 கோடி அள்ளுமா?!…

latest news

வேறலெவலில் ரீ-ரிலீஸாகும் பாகுபலி!.. இதுவும் 1200 கோடி அள்ளுமா?!…

Bahubali: தெலுங்கு பட இயக்குனராக இருந்து இப்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியிருப்பவர் ராஜமவுலி. துவக்கத்தில் கமர்ஷியல் மசாலா படங்களை இயக்கினாலும் மஹதீரா, ஈ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இவர் பிரபலமானார். ஏனெனில், அந்த இரண்டு படங்களும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

அதன்பின் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர் உள்ளிட்ட பலரையும் வைத்து பாகுபலி படம் எடுத்தார். சரித்திர கதையை ஃபேண்டஸி கலந்து அவர் படத்தை உருவாக்கியிருந்த விதம் ரசிகர்களை மிரள வைத்தது. அசத்தலான சண்டை காட்சிகள், போர் காட்சிகள், சிறப்பான வசனங்கள், ஹீரோயிசம் கொண்ட காட்சிகள் என ரசிகர்களை கட்டிப்போட்டார்.

தமன்னாவை வைத்து கிளாமரும் காட்டினார். அதோடு, கட்டப்பா என்கிற வேடத்தில் சத்யராஜும் அசத்தலாக நடித்திருந்தார். இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து பாகுபலி 2 எடுத்தார் ராஜமவுலி. இந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி பல நூறு கோடிகளை வசூல் செய்தது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டும் சேர்த்து 1200 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பாகுபலி படம்தான் பேன் இண்டியா என்கிற கான்செப்ட்டை பிரபலப்படுத்தியது. இந்த படத்திற்கு பின்னரே கேஜிஎப், கேஜிஎப் 2, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா 2 போன்ற படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளியாகி ரசிகர்களிடம் ஹிட் அடித்து பல நூறு கோடிகளை அள்ளியது.

இந்நிலையில், இப்போது பாகுபலி படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என இரண்டு படங்களிலிருந்தும் முக்கிய காட்சிகளை மட்டும் வைத்து ஒரு முழுப்படமாக உருவாக்கி வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். பாகுபலி ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக விருந்தாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top